India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலத்தில் விதிமுறையை மீறி செயல்படும் சாயப்பட்டறைகள் கண்டறியப்பட்டு அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 30க்கு மேற்பட்ட சாயப்பட்டறைகள் கண்டறியப்பட்டுள்ளது. சாயப்பட்டறைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் வாய்க்கால் கரை பகுதியில் செல்லமுத்து என்பவர் குமார் பத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகிறார். ஒற்றைக்கொம்பன் என்ற பசு இன்று மூன்று கன்றுகளை ஈன்றதால் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தோடு வந்து பார்த்து செல்கின்றனர். விவசாயி செல்லமுத்து மூன்று கன்று ஈன்ற ஒற்றைக்கொம்பன் பசுவால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவூர் பகுதியில் உள்ள மைலம்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் கே. தங்கவேலன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்ட அவருக்கு திமுக நிர்வாகிகள், ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
சேலத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அத்திகடவு-அவிநாசி திட்டம் கொங்கு நாட்டிற்கு மிகப்பெரிய திட்டமாகும். கொங்கு நாட்டில் பிறந்ததாக சொல்லும் அண்ணாமலை, இதுவரை கொங்கு நாட்டிற்கு ஒரு நல்லது செய்துள்ளாரா? அரசியல் ஆதாயம் தேடுவதையே திறமையாக கொண்டுள்ளார் என விமர்சித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (19.8.24) நடைபெற உள்ள ஆவணி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பல்வேறு வழித்தடங்களில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், ஆத்தூர், பெங்களூரு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 3 வது முறையாக நிரம்பி மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கி வழியாக உபரிநீர் எந்நேரமும் திறக்க வாய்ப்பிருப்பதால், காவேரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது என்று வருவாய்த்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வரும் 30-ம் தேதி வரை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். உரிய அனுமதி பெற்ற கடையில் மற்றும் சேலம் மாநகர பகுதியில் அமைக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வரும் 30-ம் தேதி வரை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். உரிய அனுமதி பெற்ற கடையில் மற்றும் சேலம் மாநகர பகுதியில் அமைக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களுக்கு நவீன சலவையகம் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. கலெக்டர் ஆபிசில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை (அறை எண்.110) தொடர்புகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் ‘மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், மனுக்களை வழங்கினால் அனைவருக்கும் உடனே உரிமைத்தொகை கிடைக்கும்’ என தவறான தகவல் பகிரப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.