India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பலி எண்ணிக்கை 59 ஆக இருந்த நிலையில் இன்று(ஜூன் 26) காலை சேலம் அரசு மருத்துவமனையில் ரஞ்சித்குமார் என்பவரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏசுதாஸ் என்பவரும் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று(ஜூன் 25) தெரிவித்திருப்பதாவது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மாநில அளவிலான விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் விருதாளர்கள் https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் விவரங்களை பதிவு செய்து ஜூலை 5க்குள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி இன்று (ஜூன் 25) தெரிவித்திருப்பதாவது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மாநில அளவிலான விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் விருதாளர்கள் https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் விவரங்களை பதிவு செய்து ஜூலை 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜூன் 25) நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சேகர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, உதவி இயக்குநர் (தணிக்கை) மதுமிதா, உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215ல் நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்களது குறைகளை நேரிலும் விண்ணப்ப மூலமாகவும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகரப் பகுதிகளில் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக எழுந்த புகாரில் சேலம் மாநகர காவல்துறையினர், மாநகரம் முழுவதும் இன்று (ஜூன் 25) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுபானங்களை பதுக்கி வைத்திருந்த 7 பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 120 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் செல்வகணபதி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். செல்வகணபதி, சேலம் மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
சேலம் மாநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில், இன்று கோட்டை மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்தும், கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டித்தும் தேமுதிகவினர் கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் காணிக்கை, நேற்று அறங்காவலர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில், கடந்த 5 மாதங்களில் 18.87 லட்சம் ரொக்கமாக பெறப்பட்டது. மேலும், 180 கிராம் தங்கம் மற்றும் 730 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காணிக்கை எண்ணும் பணியில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 59ஆக உயர்ந்துள்ளது. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜான் பாஷா (52) என்பவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், சேலம் மருத்துவமனையில் தற்போது 29 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் இதுவரை, 21 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.