India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது. அதில், விவசாயிகள் நடப்பு காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்து, எதிர்பாராத இடர்பாடுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கள்ளச்சாராய சம்பவத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 போ் வீடு திரும்பினா். கள்ளக்குறிச்சியில் கடந்த 18ஆம் தேதி 150க்கும் மேற்பட்டோா் கள்ளச்சாராயம் குடித்ததால், உடல் உபாதை ஏற்பட்டு விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 52 பேரில் 22 போ் உயிரிழந்தனா். 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் விமான நிலையத்தை கொஞ்சம் நகா்த்த வேண்டும் என காங்., எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனின் கோரிக்கையால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. சேலத்தில் உள்ள விமான நிலையம் 6 மாதங்கள் தான் இயங்கும். மீதமுள்ள 6 மாதங்கள் மூடிவிடுவாா்கள். இதற்குக் காரணம் பயணிகள் வருகை இல்லாததுதான். எனவே, பயனுள்ள விமான நிலையமாக மாற்ற, அதை கொஞ்சம் நகா்த்தி ஈரோடுக்கும் சேலத்துக்கும் நடுவில் வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மண்ணுயிர் காக்கும் பசுந்தாள் உர விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி இன்று (ஜூன்.27) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடைய நபர்களுக்கு 1 ஏக்கருக்கு 20 கிலோ விதைகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நேரடியாக உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே உர ஆய்வு குழுவினர் வாழப்பாடி, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்டப் பகுதிகளில் உர விற்பனை நிலையங்களில் சோதனை செய்தனர். அதில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 9 நிறுவனங்களுக்கு தடை விதித்தனர்.
சேலம் மாவட்டத்தில் விரைவில் ஒரு நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். பாமக எம்.எல்.ஏ அருள் கோரிக்கை வைத்ததையடுத்து, இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். மேலும், அடுத்த நிதிநிலை அறிக்கையில் பாமக உறுப்பினர் முன்வைத்த கோரிக்கையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழாக்கத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சேலம் அரசு மருத்துவமனையில் 48 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில், இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கர்ணாபுரத்தை சேர்ந்த சரசு (52) என்ற பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்திற்கு 4,229 வீடுகள் கட்ட முதற்கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 30ஆம் தேதி நடைபெறும் சிறப்பு கிராம சபையில் இதற்கான ஒப்புதல் பெறப்பட உள்ளது என்றும், பொதுமக்கள் அனைவரும் அன்று தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிளாஸ்டிக் பயன்பாடற்ற பசுமையான ஏற்காட்டினை உருவாக்கி, சேலம் மாவட்டம் ஏற்காட்டின் பசுமை சூழலை பாதுகாத்திட சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என சேலம் கலெக்டர் டாக்டர். பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அனைத்து சுற்றுலா பயணிகளும் பசுமையான ஏற்காட்டினை உருவாக்க துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டம் மற்றும் சேலம் மாநகரம் உட்பட்ட 4 மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடையை மீறி இயங்கிய 6 வெளி மாநில ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.