India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது என கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார். அதன்படி, 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஜூலை.09 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டி காலை 9 மணிக்கு சேலம், கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, ஜெகந்நாதன் இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். துணைவேந்தர் பணியைத் தொடரும் கோப்பில் கையொப்பமிட்டு ஜெகந்நாதன் பதவியேற்றுக் கொண்டார். நேற்றுடன் (ஜூன் 30) அவரது பதவி முடிவடைந்த நிலையில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜெகந்நாதனுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீட்டிப்புச் செய்து அண்மையில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
1.கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்; 2.ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்; 3.கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 4. அடிக்கடி நீர் பாச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
சேலம் பெரியார் பல்கலை கழக துணை வேந்தரின் பணி நீட்டிப்புக்கு எதிராக தொழிலாளர் சங்கம், ஆசிரியர் சங்க கருத்துக் கேட்பு கூட்டம் பல்கலைக் கழக நுழைவாயிலில் இன்று நடைபெற்றது. முதற்கட்டமாக நாளை மாலை பல்கலைக் கழக நுழைவு வாயில் முன்பு துணை வேந்தரின் பணி நீட்டிப்புக்கு எதிராக வாயில் முழக்க கோஷம் நடைபெறும் என்றும். அடுத்த கட்ட நடவடிக்கை தொழிலாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை தலைவர் பதவிக்கு பேராசிரியை தனலட்சுமியை புறக்கணித்து, வெங்கடேஸ்வரனை நியமித்தது சமூக அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அனைத்து தகுதிகளும் இருந்தும் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதற்காக பதவி மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மூத்த பேராசிரியை தனலட்சுமிக்குதான் அப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதற்கு 50 சதவீதம் அரசு மானியத்தில் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் மண்டல துணை இயக்குநர் துணிநூல் துறை, 1A-2/1, சங்ககிரி மெயின்ரோடு, சேலம் 636006 என்ற முகவரியிலோ, 0427-2913006 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ, ddtextilessalemregional@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்த ஏழு பேர் பதவி உயர்வு பெற்று இன்று (ஜூன் 29) முதல் தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டனர். காத்தமுத்து, ராஜமாணிக்கம், பார்த்தசாரதி, காந்தி தேசாய், மனோகரன், நாகலட்சுமி, ராமகிருஷ்ணன் இவர்கள் ஏழு பேரும் தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தற்போது பணியாற்றி வந்த 35 தாசில்தார்கள் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவின் அடிப்படையில் தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பணி மாறுதல் செய்யப்படும் இடம் மேட்டூர் தாசில்தார் ரமேஷ், காடையாம்பட்டி விமல் பிரகாசம், சங்ககிரி வாசுகி, பெத்தநாயக்கன் பாளையம் ஜெயக்குமார், தலைவாசல் பாலாஜி, கெங்கவல்லி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 35 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் தொழிலாளர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சங்கம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், திங்கள்கிழமை முதல் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், முன்னாள் பதிவாளர் தங்கவேலுவுக்கு உரிய தண்டனை பெற்று தர வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கல்வியியல் துறைத்தலைவர் பதவிக்கு உரிய தகுதியும், பணிமூப்பும் கொண்ட தனலட்சுமி என்ற பேராசிரியையை புறக்கணித்து விட்டு, வெங்கடேஸ்வரன் என்ற ஆசிரியரை நியமித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.