India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் இன்றைய (பிப்ரவரி 2) முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 9 மணி தமிழக வெற்றி கழகம் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா நல உதவிகள் வழங்கல். 2) காலை 10 மணி தமிழ்நாடு வெள்ளி வியாபாரிகள் நல சங்க விழா சிவதாபுரம். 3) காலை 10 மணி மாமாங்கம் அருகே தனியார் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் துவக்க விழா. 4) மாலை 5:30 மணி மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் நூல் வெளியீட்டு விழா வாசவி மஹால்

தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் வடமேற்கு (சங்ககிரி தொகுதி, ஓமலூர் தொகுதி) மாவட்ட செயலாளராக K. செந்தில்குமார் என்பவரை, அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். மேலும், இணை செயலாளராக R.இளம்பரிதி, பொருளாளராக M.பெருமாள் மற்றும் துனைச் செயலாளர்களாக P.ராகுல் காந்தி, P.சியாமளாதேவி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2024- ஆம் ஆண்டில் தமிழகத்தில் அதிகம் நாய் கடியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில், சேலம் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சேலத்தில் சுமார் 37,011 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தஞ்சையில் 24,038 பேரும், திருச்சியில் 23,978 பேரும் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாநகர பகுதியான அழகாபுரத்தில் இருந்து ஐந்து ரோடு செல்லும் சாலையில் இன்றிரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றனர். வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் கடும் அவதியடைந்தனர். முகூர்த்தங்கள் என்பதால் கடும் போக்குவரத்து என்று கூறப்படுகிறது.

கோவை- சோரனூர் பயணியர் ரயில் (56603) நாளை (பிப்.02) மாலை 04.25 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாலக்காடு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்; பாலக்காடு- சோரனூர் ரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பாலக்காட்டில் இருந்து சோரனுக்கு இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

சேலம அரசு மருத்துமனையில் மயங்கிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை கொண்டு வந்து பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அம்மாபேட்டை காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெரிய கிணறு பகுதியை சேர்ந்த தறி தொழிலாளி தியாகு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், காப்பாற்ற முயற்சியின் போது உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

சேலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குதிரை சவாரி போட்டியில் ஆத்தூர் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவி பிரியங்கா கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இன்று மாணவி பிரியங்காவை பள்ளியின் முதல்வர் மற்றும் இயக்குனர் பாராட்டினர்.

சேலம் வழியாக இயக்கப்படும் தாம்பரம்- கோவை வாராந்திர சிறப்பு ரயில் சேவை, பயணிகள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் தாம்பரம்- கோவை ரயில் வரும் பிப்.28- ஆம் தேதி வரையும், கோவை- தாம்பரம் சிறப்பு ரயில் வரும் மார்ச் 02- ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்.05ம் தேதி நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குரிமைப் பெற்ற அனைத்து தொழிலாளர்களும் வாக்களிக்கும் வகையில் அனைத்து தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட விவசாயிகள் மாதாந்திர குறைதீர் கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் யூரியா 4,704 மெட்ரிக் டன்னும், டி ஏ பி 2,041 மெட்ரிக் டன்னும், பொட்டாஸ் 5,389 டன்னும், காம்ப்ளக்ஸ் 3902 டன்னும், ஆக மொத்தம் 16,036 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளதாகவும், கடந்த ஆண்டு 1,95,099.6 ஹெக்டர் நிலப்பரப்பு சாகுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.