Salem

News July 5, 2024

மேட்டூர் அணையின் நீர்மட்டம்

image

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1223 கன அடியில் இருந்து 1281 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 39.670 அடியில் இருந்து 39.700 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், நீர் இருப்பு 11.936 டி.எம்.சி.யாக உள்ளது.குடிநீர் தேவைக்கு மின் நிலையம் வாயிலாக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

News July 4, 2024

அதிமுக நிர்வாகி கொலை: இபிஎஸ் வலியுறுத்தல்

image

சேலத்தில் அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இக்கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளியையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News July 4, 2024

சேலம் மாவட்டத்திற்கு மழை

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இன்று இரவு 8.30 மணி வரை நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 4, 2024

சேலம் அதிமுக நிர்வாகி கொலை: இபிஎஸ் இரங்கல்

image

சேலம் அதிமுக பகுதி செயலாளர் சண்முகம், இன்று நள்ளிரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். கண்டனம் தெரிவித்ததோடு, அவரை இழந்து வாடும் குடும்பபத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 4, 2024

சேலம் கலெக்டர் தகவல்!

image

கலெக்டர் இரா.பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளதாவது: சேலம் மாவட்டத்தில் தற்போது 108 நீர்நிலைகள் வண்டல் மண், களிமண் எடுக்க தகுதி வாய்ந்தவையாக கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இணையதள வழியில் பெறப்படும் விண்ணப்பங்களை, இணையதளதரவுகள் மூலம் சரிபார்க்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை விவசாய பெருமக்கள், மட்பாண்ட தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாரு தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

சேலம்-சென்னை இடையே 2 முறை விமான சேவை

image

சேலம்-சென்னை இடையே விமான சேவையை அதிகரிக்க வேண்டுமென, பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்ற இண்டிகோ நிறுவனம், ஆகஸ்ட் மாதம் முதல் சேலம்-சென்னை இடையே வாரம் 3 நாட்களுக்கு 2 முறை விமான சேவை இயக்கப்படுமென அறிவித்துள்ளது. வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்களில் 2 முறை விமான சேவை இயக்கப்படும் எனவும் இண்டிகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

News July 3, 2024

சேலம் மாவட்டத்திற்கு மழை

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை சேலம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 3, 2024

TNPL: சேலத்தில் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

image

வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை, சேலம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை எஸ்.டி.சி/ஏ. அலுவலகம் மற்றும் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் ஆகிய 2 இடங்களில் இன்று தொடங்கியுள்ளது. ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை மற்றும் கோவை அணிகள் மோதவுள்ளன.

News July 3, 2024

அரசு நிதி உதவி; ஆட்சியர் அழைப்பு

image

கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான நிதி உதவியை அரசு உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்
அறை எண் 110இல் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல
அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

தமிழக முதல்வர் தெரிவித்தது தவறு: இ.பி.எஸ்.

image

சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த அதிமுக அரசு முன்வரவில்லை என முதல்வர் தெரிவித்தது தவறு என இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளச்சாரயம் விவகாரத்தில், அரசின் அழுத்தம் காரணமாகவே ஆட்சியர் தவறான செய்தியை வெளியிட்டார். சிபிசிஐடி விசாரித்தால் உண்மை குற்றவாளி தப்பிவிடுவார். இதற்கு தீர்வு வேண்டும் என்றால் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்” எனக் கூறினார்.

error: Content is protected !!