India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி மரவள்ளிக்கிழங்கு விலை நிர்ணயம் தொடர்பான முத்தரப்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளதாகவும், விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் , வியாபாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில், கிழங்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று “குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகவோ, முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி வரும் லிங்க், ஆன்லைன் விளம்பரங்களை நம்பி, உங்கள் பணத்தை இழந்து விட வேண்டாம். ஆன்லைன் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்பதத்தை வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முதல் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்கள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை நான்காம் தேதி ஆத்தூர், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, அம்மம்பாளையம், வளையமாதேவி, கல்லா நத்தம் பகுதியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 15 ரயில் நிலையங்களில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.271 கோடியில் மதிப்பீட்டில் நடை மேம்பாலம், நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (பிப்.3) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மாநகர காவல்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (பிப்ரவரி 3) இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

எடப்பாடி அருகே கணவன் உயிரோடு இருக்கும் போதே சொத்திற்காக ஆசைப்பட்ட மனைவி, கணவர் இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ் போலியாக பெற்று, வாரிசு சான்றிதழ் வாங்க எடப்பாடி வருவாய்த்துறையிடம் மனு அளித்த போது, வருவாய்த்துறை விசாரணையில் கணவர் விஜயகுமார் உயிரோடு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து மனு அளித்த மனைவியை கையும், களவுமாகப் பிடித்து, எடப்பாடி காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை வடக்கு ரயில்வே யார்டில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சேலம் வழியாக இயக்கப்படும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்- கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12678) ஆகிய ரயில்கள் நாளை (பிப்.04) வழக்கமான பாதையில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

வீராணம், துளசி மணியூர் பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரியான குமரன் (வயது 30), நேற்றிரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஓடைப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் குமரனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். தகவலறிந்து விரைந்து வந்த வீராணம் காவல் நிலைய போலீசார், சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கும் நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் யுசிஜி அறிவிப்பை சுட்டிக்காட்டி பிஹெச்டிக்கான கல்வி தகுதியை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளதால் சர்ச்சை. 4 ஆண்டுகள் இளநிலை படித்திருந்தாலும் பிஹெச்டிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்புக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்!.
புதிய கல்வி கொள்கை தொடர்பான அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை என துணைவேந்தர் விளக்கம்.
Sorry, no posts matched your criteria.