Salem

News July 9, 2024

சீர்மரபினர் நல வாரியம் உறுப்பினர் சேர்க்கை

image

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி இன்று (ஜூலை 9) தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

சேலம் தெற்கு ரயில்வே அறிவிப்பு 

image

ரயில் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் இன்று (ஜூலை 9) மட்டும் சேலத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில், கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று. சேலம் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 9, 2024

JEE தேர்வில் சாதித்த அரசுப் பள்ளி மாணவி

image

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி சுகன்யா, JEE நுழைவுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து, திருச்சி NIT-யில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார். மாணவி சுகன்யாவின் சாதனைக்கு கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். JEE நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளித்த தமிழக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் மாணவி சுகன்யா நன்றியை தெரிவித்தார்.

News July 9, 2024

சேலம்: காய்கறிகள் விலை உயர்வு

image

சேலம் மாவட்டத்தில் சேலம், ஓமலூர், ஆத்தூர், மேட்டூர் உழவர் சந்தைகளில், இன்று ஒரு கிலோ கேரட் ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.50, ரூ.60 என விற்பனையாகி கொண்டிருந்த காய்கறிகளின் விலை தற்போது கிலோ ரூ.10 ரூபாய் முதல் 20 வரை விலை உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருவதால் காய்கறி வரத்து குறைவாக உள்ளது.

News July 9, 2024

இசைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் 

image

சேலம் அரசு இசைக்கல்லூரியில் பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சி துவங்க உள்ளதாக கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதற்கு 17வயது முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆண்டுக்கு ரூ.500 கட்டணத்தில் தமிழர் பாரம்பரிய கலையான இசை, நாடகம், கரகாட்டம், மரக்காலாட்டம் மற்றும் பறையாட்டம் ஆகிய கலைகளில் கற்றுக்கொடுக்கப்படும். 0427-2906197, 99526 65007 என்ற திட்ட அலுவலரின் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News July 9, 2024

அதிமுகவை ஒருங்கிணைப்போம்: புகழேந்தி

image

பெங்களூரு புகழேந்தி சேலம் தனியார் மண்டபத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “அதிமுக தற்போது அழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அதிமுகவில் இணைய தயாராக உள்ளனர். அதேபோல் தொண்டர்களும் தயாராக உள்ளனர். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கிராமம் கிராமமாக சென்று பேச உள்ளோம்” என்று பேசினார்.

News July 9, 2024

சேலத்தில் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

image

சேலம் மாநகரில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட அதிகமாக இயக்கப்படுகிறது. இது கண்டறியப்பட்டால், பாதுகாப்பு நலன் கருதி வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை, போக்குவரத்து துறையினருக்கு உத்தரவிட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News July 8, 2024

“அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது” 

image

சேலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தபின் காவல்துறை அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது. மேலும் பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களுக்கும் பாதுகாப்பில்லை; திட்டமிட்டுதான் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது என்றார். 

News July 8, 2024

சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

image

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அதிமுக ஆட்சியில் பல்வேறு புதிய மேம்பாலங்கள் கொண்டுவரப்பட்டன. அணை மேடு பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் திறக்கப்படாமல் உள்ளது என்றார்.

News July 8, 2024

அதிமுகவில் இணைந்த 500 பேர்

image

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஏற்பாட்டில் இணைந்த அவர்களுக்கு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டு கட்சியில் சேர்க்கப்பட்டது.

error: Content is protected !!