Salem

News April 11, 2025

சேலத்தில் புதிய மாவட்ட சிறை?

image

சேலம் மாவட்டத்தில் புதியதாக மாவட்டச் சிறை ஒன்று கட்டப்பட உள்ளதாகவும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு ஆகியோரை தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. மகேஸ்வரர் தயாள் நேரில் சந்தித்து பேசியதாகவும், சேலம் மத்திய சிறையில் ஆய்வுச் செய்து சிறை வாடர்களிடம் கோரிக்கை மனுக்களை டிஜிபி பெற்று கொண்டதாக அதிகாரிகள் தகவல்.

News April 11, 2025

சேலத்திற்கு மழை இருக்கு

image

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.11) பல்வேறு பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News April 10, 2025

சேலத்தில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு!

image

சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, பல இடங்களில் பரவலாக மழையும் பெய்தது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. SHARE IT!

News April 10, 2025

கடித்து குதறிய தெரு நாய்கள்: 20 பேர் காயம் 

image

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாய் கடியால் காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

News April 10, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு!

image

பண்டிகைகள், விடுமுறையை முன்னிட்டு, ஏப்ரல் 11- ஆம் தேதி முதல் வரும் மே 04- ஆம் தேதி வரை வாரத்தில் வெள்ளிக்கிழமையில் தாம்பரத்தில் இருந்து போத்தனூருக்கும், ஞாயிற்றுக்கிழமைதோறும் போத்தனூரில் இருந்து தாம்பரத்திற்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (06185/06186) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News April 10, 2025

சேலத்தில்  கேஸ் சிலிண்டர் விலை ரூ.886.50 ஆக உயர்வு!

image

நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ரூபாய் 50 உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 886.50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

News April 10, 2025

சேலம் மக்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

image

▶️மாவட்ட ஆட்சித் தலைவர் 0427-2450301▶️காவல்துறை கண்காணிப்பாளர் 0427-2274747. ▶️சேலம் மாநகராட்சி ஆணையாளர்,0427-2213131▶️ சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் 0427-2224000 ▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-9445000222 ▶️மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் 9499933489 ▶️லஞ்ச ஒழிப்புத் துறை 0427-2411111..மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News April 10, 2025

தமிழ் புத்தாண்டு- சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு!

image

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக வரும் ஏப்ரல் 11- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கும், ஏப்ரல் 14- ஆம் தேதி போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் (06027/06028) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

News April 10, 2025

சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

image

தமிழ் புத்தாண்டு, விஷு, புனிதவெள்ளியை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக ஏப்ரல் 10, 11, 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (06089/ 06090) இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 10, 2025

சேலம் அரசு பேருந்தில் அட்டூழியம் 3 பேர் கைது

image

சேலத்தில் இருந்து வெள்ளிமலை நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் ஏறிய மூன்று பேர், உள்ளே செல்லாமல் படியிலேயே நின்றுகொண்டு, நடத்துனர் செந்தில்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன்,அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட மாணவர் விஜய் (20), ரீகன் (21) மற்றும் பெயிண்டர் விக்ரம் (23) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!