India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்கள் மூலம் சேலத்தில் 54,000 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். இதுகுறித்து ஓமலூரியில் பேசிய அவர், இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களை அவா்கள் இருக்கும் பகுதிக்கே சென்று மனுக்களைப் பெற்று, உடனடியாக தீா்வு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 367 கிராம ஊராட்சி பகுதிகளில் 92 முகாம்கள் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது” என்றாா்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு மாட்டை சிறுத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பொது மக்கள் தனியாக வனப்பகுதிக்கோ, வனத்தை ஒட்டியுள்ள பகுதிக்கு செல்ல கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைக்க, விமானம் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தந்தார். அப்போது, மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் தருமபுரி புறப்பட்டு சென்றார்.
ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, மக்களுக்கான 15 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, சேலம் கோட்டத்தில் மகளிருக்கான 20 புதிய நகர அரசுப் பேருந்து சேவைகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசியல் திட்டங்கள் சரியாக மக்களுக்கு கொண்டு சேர்கிறதா? என்று கண்டறியவே இந்த ;மக்களுடன் முதல்வர்; திட்டம் எனத் தெரிவித்தார்.
தருமபுரியில் ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். அத்துடன், சேலம் கோட்டத்தில் மகளிருக்கான 20 புதிய நகர அரசுப் பேருந்து சேவைகளையும் தொடங்கி வைக்கிறார். அதற்காக, விமானம் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார். இதற்காக, சேலம் விமான நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொச்சினில் இருந்து சேலம் வந்து பெங்களூருவுக்கு செல்ல வேண்டிய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் கொச்சின் விமான நிலையத்திலேயே விமானம் நிறுத்தப்பட்டுள்ளதால், சேலம்- பெங்களூரு விமான சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குவுள்ளாகினர்.
தமிழக பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் முதலிடம் பிடித்து அசத்திய சேலம் மாவட்டம், பெருமாகவுண்டம்பட்டி அரசு மாதிரிப் பள்ளி மாணவி ராவணியை இன்று நேரில் அழைத்து சால்வை அணிவித்து சேலம் ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி பாராட்டினார். மேலும், தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்று கூறி அவருக்கு புத்தகத்தை வழங்கினார்.
சேலத்தில் நாளை(ஜூலை 11) ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சேலம் வருகையை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை காலை 10 மணிக்கு சேலம் வரும் முதல்வர் தருமபுரியில் நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்கவுள்ளார். இதனால், ஓமலூர் விமான நிலையப் பகுதி உள்ளிட்ட இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட காவல் ஆணையராக இருந்த விஜயகுமாரி ஆயுதப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரவின் குமார் அபிநபு சேலம் மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர காவல் ஆணையராக எஸ்.லட்சுமியும், தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரியில் ஜூலை 11ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதால் அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.