Salem

News February 8, 2025

மாணவியிடம் அத்துமீறல்: தற்காலிக ஆசிரியர் பணி நீக்கம்

image

ஓமலூர் அருகே சிக்கனம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக சிவக்குமார் பணியாற்றி வந்தார். அவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமாரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார.

News February 8, 2025

சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

பாசூர்-சாவடிப்பாளையம் ரயில்வே யார்டுகளில் பொறியியல் பராமரிப்பு காரணமாக, பிப்.08, 10 தேதிகளில் செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) செங்கோட்டையில் இருந்து கரூர் வரையிலும், ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) கரூரில் இருந்து புறப்படும்; இந்த ரயில்கள் கரூர்-ஈரோடு இடையே இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News February 8, 2025

அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

image

“மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை கடந்த 3 மாதங்களாக ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசால் வழங்கப்படவில்லை என வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, நிதி நிலையைக் காரணம் காட்டி, மாற்றுத் திறனாளிகளை வஞ்சிக்கும் ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்”- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

News February 8, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

சேலம் மாநகரத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும்அசம்பாவிதங்களை தவிர்க்கவும்சேலம் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சேலம் மாநகரகாவல்துறைக்கு உட்பட்ட சேலம் டவுன் சரகம்,அன்னதானப்பட்டி,கொண்டலாம்பட்டி,அம்மாபேட்டை, அஸ்தம் பட்டி,சூரமங்கலம்சரகம் ஆகியபகுதிகளில்காவல் அதிகாரிகள்ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று 7-2-2025 இரவுரோந்து அதிகாரிகளின் விவரம்

News February 7, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

சேலம் மாவட்ட காவல்துறை இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும்அசம்பாவிதங்களை தவிர்க்கவும்சேலம் மாவட்டகாவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சேலம் மாவட்டகாவல்துறை உட்கோட்டத்திற்க்குட்பட்டசேலம் ஊரகம்,சங்ககிரி,ஆத்தூர்,மேட்டூர்,ஓமலூர்,வாழப்பாடிஉட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள்ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று 7-2-2025 இரவுரோந்து அதிகாரிகளின் விவரம்

News February 7, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

சேலம் மாவட்டத்தில் வரும் 10ஆம் தேதி, தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெற உள்ளது. மாவட்டம் முழுவதிலும் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News February 7, 2025

20,696 வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு வர்த்தகச் சான்று

image

2024- 25ஆம் நிதியாண்டில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் 20,696 கடைகள்,வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உரிய கட்டணம் செலுத்தி வர்த்தக உரிமத்தைப் பெற்றுள்ளன. இதன்மூலம் ரூ.97.89 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உரிமம் பெறாதவர்கள் தற்போது இணையதளம் வாயிலாக மனு செய்து மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்தி, வணிக உரிமத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News February 7, 2025

இபிஎஸுக்கு ஆளுயர மாலை அணிவித்து நிர்வாகி வாழ்த்து

image

அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.டி.வி.அருண்குமார், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வின்போது, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் உடனிருந்தார்.

News February 7, 2025

கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: இபிஎஸ் கண்டனம்

image

கோவை-திருப்பதி இடையே சென்றுகொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணிக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கர்ப்பிணி என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

News February 7, 2025

மக்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்த இபிஎஸ்

image

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இணைப்புச்சாலை அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள், அவ்வழியாக வந்த அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தங்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் மக்கள் வலியுறுத்தினர்.

error: Content is protected !!