India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் நாளை “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமின் 4-ஆம் நாளான நாளை (ஜூலை 18) அன்று 6 இடங்களில் முகாம் நடைபெறவுள்ளன. கூட்டாத்துப்பட்டி, தொளசம்பட்டி, கருங்கல்லூர், மஞ்சினி, நடுவலூர், வெள்ளரிவெள்ளி உள்ளிட்ட இடங்களில் காலை 10மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 07.45 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், இரவு 07.30 மணிக்கு புறப்படும்; சேலம் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12.07 மணிக்கு வர வேண்டிய ரயில், நள்ளிரவு 11.53 மணிக்கே வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்களையும், சலுகைகளையும் உரிய முறையில் வழங்காமல் பயனாளிகளைத் தேர்வு செய்தும் அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்பார் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
கட்டுமானம் முறைசாரா நல வாரியங்களில் 74 லட்சம் தொழிலாளர்களின் ஆன்லைன் தரவுகள் காணவில்லை. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் சார்பில், சேலம் கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, சேலம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பாலசந்தர், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனாவிற்கு பதிலாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அஞ்சல் துறையில் 44,228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சேலம் மாவடத்திலும் காலிப்பணியடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு,18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <
சேலம் மேட்டூர் அணையில் இன்று (ஜூலை 16) காலை நிலவரப்படி, அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,047 கன அடியில் இருந்து 5,054 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் 43.220 அடியில் இருந்து 43.830 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், நீர் இருப்பு 14.147 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும், குடிநீர் தேவைக்கு மின்நிலையம் வாயிலாக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
திராவிட கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி 5 நாட்கள் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரை பயணம் நிறைவு பொதுக்கூட்டம் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இதில் பேசிய தி.க தலைவர் கி.வீரமணி, “நீட் தேர்வு மாநில கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. நீட் தேர்வு என்பது சூழ்ச்சி, ஊழல். எனவே நீட் தேர்வை ஒழித்து தலைமுறையை காப்போம்” என சூழுரைத்தார்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அம்மாப்பேட்டை குமாரகிரி ஏரி, அல்லிக்குட்டை ஏரி, மூக்கனேரி, பள்ளப்பட்டி மற்றும் போடிநாயக்கன்பட்டி ஏரிகள் புதுப்பொழிவு பெற்று வருகின்றன. இந்த நிலையில் அம்மாப்பேட்டை குமாரகிரி ஏரியை சுற்றுலாத்தலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்று மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் குமாரகிரி ஏரியில் பரிசலில் சவாரி செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
பெ.நாயக்கன்பாளையம் தாலுகா தும்பல் துணைமின் நிலையத்தித்திற்கு உட்பட்ட பகுதிகள், எடப்பாடி தாலுகாவில் எடப்பாடி நகரம், வெள்ளார் நா.பாளையம், ஆவணியூர், வேம்பேரி, தாதாபுரம், மலையனூர், தங்காயூர் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் இடங்கணசாலை, கே.கே.நகர், மலங்காடு, மகுடஞ்சாவடி, கோத்துப்பாலிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை(ஜூலை 16) காலை 9 மணி – மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். தெரிஞ்சவங்களுக்கு SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.