India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாமின் ஐந்தாம் நாளான ஜூலை 19- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி, ஓமலூர், வீரபாண்டி, தலைவாசல், காடையாம்பட்டி, கொங்கணாபுரம் உள்ளிட்ட 6 இடங்களில் முகாம் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று(ஜூலை 17) இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்திலும் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிட்டத்தக்கது.
இன்று(ஜூலை 17) மாலை 4.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 20,910 கன அடியிலிருந்து 21,520 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 46.80 அடியிலிருந்து 47.78 அடியாக அதிகரித்துள்ளது. நீர் இருப்பு 16.44 டி.எம்.சி.யாக உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் 45.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, ஏற்காட்டில் 12.6 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக, சேலம் மாநகரில் 0.8 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று(ஜூலை17) மிதமான மழை முதல் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆடி பௌர்ணமியையொட்டி வரும் 21 ஆம் தேதி திருவண்ணாமலைக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் இணையதளம் மற்றும் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் கோட்ட போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஆடி மாத பிறப்பையொட்டி சேலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.600, சன்னமல்லி ரூ.500, முல்லை ரூ.280, மலைகாட்டான் ரூ.240, கலர் காட்டான் ரூ.160, வெள்ளை அரளி ரூ.100, மஞ்சள் அரளி, செவ்வரளி ரூ.100, நந்தியா வட்டம் ரூ.100 என விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 850 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில், கைதிகளின் அறைகளில் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று சிறை பி பிளாக்கில் மண்ணில் புதைத்து வைத்திருந்த 2 செல்போன்கள் மற்றும் 3 பேட்டரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செல்போன்களை மறைத்து வைத்த கைதிகள் யார், எப்படி வந்தது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி அளவிற்கு உயர்ந்தது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 16,577 கன அடியில் இருந்து 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.62 அடியில் இருந்து 46.80 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,000 கன அடிநீர் திறக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் போலீசாருக்கு விருப்ப இடம் மாறுதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏட்டுகள் மற்றும் மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் 89 பேர் உட்பட 143 போலீசாருக்கு இடம் மாறுதல் வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவை எஸ்.பி. அருண் கபிலன் பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.