Salem

News September 8, 2024

சேலம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வடமேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) சேலம் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2024

சேலத்தில் ரூ.1.25 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

image

விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆவணி மாத தொடர் முகூர்த்தத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் 13 இடங்களில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளில், நேற்று ஒரே நாளில் 1,032 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 317.34 டன் அளவிலான காய்கறிகள், பழங்கள் ரூ.1.25 கோடிக்கு விற்பனையானதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 8, 2024

சேலத்தில் அன்புமணி ராமதாஸுக்கு உற்சாக வரவேற்பு

image

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் வருகை தந்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக எம்எல்ஏ அருள் சதாசிவம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிவதாபுரம் மொரம்புக்காடு பகுதியில் வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத் தியாகி குப்புசாமி இல்லத்தை இன்று அன்புமணி ராமதாஸ் (செப்.08) திறந்து வைக்கவுள்ளார்.

News September 8, 2024

கோவிலுக்கு பூஜை பொருட்கள் எடுத்து வந்த இஸ்லாமியர்கள்

image

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் உள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, தம்மம்பட்டி இஸ்லாமிய பொதுமக்கள் நேற்று மத நல்லிணக்கத்தை பேணிக்காத்து, ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு அபிஷேக பூஜை பொருட்களுடன் வருகை தந்தனர். பின்னர் கோவில் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போற்றினார்கள்.

News September 8, 2024

சேலத்தில் ‘டவுசர்’ கொள்ளையர்கள்: தேடும் போலீசார்

image

சேலம்: நரசிங்கபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவர் வீட்டின் வெளியே நேற்று முன்தினம் இரவு சத்தம் கேட்க வெளிப்புற விளக்குகளை போட்டார். அப்போது 4 பேர் வேகமாக ஓடினர். வீட்டில் இருந்த சிசிடிவியை பார்த்தபோது, முகமூடி அணிந்த 4 பேர் டவுசர் மட்டும் அணிந்து அரை நிர்வாணத்துடன் வீட்டுக்கு வந்தது பதிவாகியிருந்தது. தங்கவேல் புகார்படி ஆத்துார் டவுன் போலீசார் டவுசர் கொள்ளையர்களை தேடுகின்றனர்.

News September 8, 2024

சேலம்: பட்டாசு வெடித்து சிதறி துக்க வீட்டில் 6 பேர் காயம்

image

சேலம்: ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (90). இவர் இறந்ததால் நேற்று மதியம் அவரது வீட்டுக்கு உறவினர்கள் வந்தனர். அப்போது பட்டாசு வெடிக்கப்பட்டது. அதிலிருந்து தீப்பொறி அங்கு வைக்கப்பட்ட பட்டாசு மூட்டையில் விழுந்து, மொத்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதில் அருகே இருந்த 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 7, 2024

மஞ்சுமல் பாய்ஸ் குணா குகையில் விநாயகர்

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலம் அய்யந்திருமாளிகையில் ஸ்ரீ சக்தி விநாயகர் குழு சார்பில், மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் வரும் காட்சியைப் போன்று குணா குகை போன்று பந்தல் அமைக்கப்பட்டு வாழை தோரணங்களுடன் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் பக்தர்கள் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருக விநாயகரை வழிபட்டனர்.

News September 7, 2024

48,969 பேர்: சேலம் கலெக்டர் தகவல்

image

சேலம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வரும் செப் 10 முதல் செப்.24 வரை நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 26,478 பள்ளி மாணவ, மாணவிகளும், 13,273 கல்லூரி மாணவ, மாணவிகளும், 1,737 மாற்றுத்திறனாளிகளும், 1,246 அரசு அலுவலர்களும், 6,235 பொதுமக்களும் என மொத்தம் 48,969 நபர்கள் பதிவுச் செய்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News September 7, 2024

சேலத்தில் 558 சிலைகளுக்கு அனுமதி

image

சேலம் மாவட்டத்தில் மட்டும் 558 விநாயகர் சிலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அனுமதி இல்லாமல் யாரும் விநாயகர் சிலை வைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதி பெற்று விநாயகர் சிலை வைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 7, 2024

சேலம்: 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில், 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சேலம் கோட்டம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!