Salem

News February 13, 2025

போதை இல்லா தமிழ்நாடு கைபேசி செயலி

image

மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி கூறியதாவது, போதையில்லா தமிழ்நாடு என்ற கைபேசி செயலியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இதன் வாயிலாக போதை பொருள் பயன்படுத்துதல் குறித்த தகவல் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக வருகின்ற 18ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கான அறிமுக கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

சேலத்தில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

சேலம் மாநகரில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் சேலம் டவுன் சட்டம், ஒழுங்கிற்கும், அங்கு பணியாற்றிய சந்திரகலா மாநகர குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த குமார் கிச்சிப்பாளையம் சட்டம், ஒழுங்கிற்கும், அங்கு பணியாற்றிய ஜெய்சீல்குமார் டவுன் குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

News February 13, 2025

மானிய விலையில் சூரிய மின்வேலி ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் வன விலங்குகளால் ஏற்படும் சேதாரத்தை தவிர்த்திட 50 சதவிகித மானியத்தில் சூரிய மின்வேலி அமைக்க உள்ளதாகவும், 10 வருட உத்தரவாத்துடன் அமைக்கப்படும் இந்த இந்த மின்வேலியால் உயிர் சேதம் தவிர்க்கப்படும் என்றும் விருப்பமுள்ள விவசாயிகள் அலுவலகத்தை அணுகி விபரங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 12, 2025

சிறப்பு அலங்காரத்தில் வெண்ணங்கொடி முனியப்பன்

image

சேலம் ஜாகிர் அம்மாப்பாளையத்தில் அமைந்துள்ள சேலத்து காவல் தெய்வமான அருள்மிகு ஸ்ரீ வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் இன்று (பிப்.12) தை மாத பௌர்ணமியை முன்னிட்டு வெண்ணங்கொடி முனியப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News February 12, 2025

மணல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது நான்கு பேர் படுகாயம்

image

ஆத்தூர் அருகே இன்று காலை அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதே போல் மற்றொரு விபத்து ஏற்பட்டுள்ளது. தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி வளைவில் லாரி கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த நான்கு பெண்கள் படுகாயம் அடைந்தனர். கெங்கவல்லி தீயணைப்பு நிலை அலுவலர் அசோகன் தலைமையில் ஜேசிபி உதவியுடன் மீட்டு, காயமடைந்தவர்களை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 12, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் மாவட்டத்தில் இன்று (12.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News February 12, 2025

அரசுப் பேருந்து விபத்து- ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

image

சேலம் , ஆத்தூர் அருகே அரசுப் பேருந்துக் கவிழ்ந்த விபத்தில் அலைபேசியில் பேசியபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் செல்வராஜை பணியிடை நீக்கம் செய்து சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பிரேக் பழுதால் அரசுப் பேருந்து விபத்து என்று கூறப்படுவது தவறு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பைத்தூர் அருகே கல்லுக்காடு பகுதியில் நகரப் பேருந்து கவிழ்ந்து 6 பேர் காயமடைந்தனர்.

News February 12, 2025

எடப்பாடியில் மாணவன் மரணம்: பலத்த பாதுகாப்பு

image

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே தனியார் பள்ளி பேருந்தில் 2 மாணவர்கள் சண்டையிட்டு தாக்கிக் கொண்டதில் ஒரு மாணவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து தாக்கிய மற்றொரு மாணவனை எடப்பாடி காவல்துறையினர் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் பள்ளி வழக்கம் போல் செயல்பட்டுவருகிறது.

News February 12, 2025

விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி பழனி பாதயாத்திரை

image

நடிகர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பப்படுகிறார்கள். அந்த வகையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிராமத்திலிருந்து கிரி மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் பாதயாத்திரையாக கிராமத்திலிருந்து பழனிக்கு சென்று, விஜய் முதலமைச்சராக வேண்டும் என்று நேற்று தைப்பூசம் வந்தவர்கள் இன்று சேலம் மாவட்டம் அருகே ஓமலூர் நெடுஞ்சாலை ஓரமாக சென்று கொண்டுள்ளார்கள்.

News February 12, 2025

பணம் இரட்டிப்பு மோசடி: ஜாமீன் மனு தள்ளிவைப்பு

image

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா அறக்கட்டளை பெயரில் பணம் இரட்டிப்பு மோசடி செய்த வழக்கில் கைதான அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயாபானு, ஜெயபிரதா, சையத் மஹ்மூத் ஆகிய மூன்று பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் பிப்.17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!