Salem

News July 22, 2024

மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு

image

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 69,873 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 76.11 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, அணையின் நீர் இருப்பு 38.18 டிஎம்சி. யாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News July 22, 2024

சேலம் மாநகராட்சிக்கு புதிய ஆணையர்

image

சேலம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பாலச்சந்தர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி புதிய ஆணையராக ரஞ்சித் சிங் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

News July 22, 2024

பேச்சுப் போட்டிக்கு உடனே விண்ணப்பிக்கவும்

image

கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ என்னும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் 3 நபர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் முறையே பரிசாக வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் தகவல்களும் kalaignar100pechu.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இம்மாதம் 25ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.

News July 22, 2024

மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்கள். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப., மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.ரா.மகிழ்நன் ஆகியோர் உள்ளனர்.

News July 22, 2024

பாஜக சார்பில் கூட்டம்: நிர்வாகிகளுக்கு அழைப்பு

image

சேலம், வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் வரும் 26ஆம் தேதி மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம், கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன், மாநில துணைத்தலைவர் கே.பி.இராமலிங்கம் கலந்து கொள்கின்றனர். இதில் பாஜக., நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள மாவட்ட தலைவர் சண்முகநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

News July 22, 2024

சேலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடு செய்து
பணியில் சேர்ந்ததாக எழுந்த புகாரில் பேராசிரியர்கள்,
ஊழியர்கள் என 8 பேரை சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் ஊழியர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

News July 22, 2024

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை தாண்டியது

image

இன்று (ஜூலை 22) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 58,934 கனஅடியிலிருந்து 64,033 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 75.05 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 37.20 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

News July 22, 2024

சேலம் அணி அதிர்ச்சி தோல்வி

image

திருப்பூர்-சேலம் இடையேயான TNPL போட்டி, நேற்று நெல்லையில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி, அதிரடியாக விளையாடியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் அணி, 141 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. திருப்பூர் அணி சார்பாக, துஷார் 79 ரன்களும், குரு 3 விக்கெட்டுகள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

News July 22, 2024

துணை முதல்வர் பதவி: சேலத்தில் இபிஎஸ் கருத்து

image

சேலத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக கூறப்படுவதை எப்படி வரவேற்க முடியும்? அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை. மேலும் திமுக, ஒரு குடும்ப கட்சி என்று பேசினார்.

News July 22, 2024

துணை முதல்வர் பதவி: இபிஎஸ் கருத்து

image

சேலத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக கூறப்படுவதை எப்படி வரவேற்க முடியும்? அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை. மேலும் திமுக, ஒரு குடும்ப கட்சி என்று பேசினார்.

error: Content is protected !!