Salem

News September 13, 2024

சேலத்தில் 18 ஏக்கரில் மாபெரும் மைதானம்!

image

சேலம் கருப்பூரில் 18 ஏக்கர் பரப்பளவில் ₹20 கோடி மதிப்பில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது என்று கூறினர். சேலம் மாநகரின் மையப்பகுதியில் அண்ணா பூங்கா அருகில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

News September 12, 2024

அரசு இசைப்பள்ளியில் இசைக் கருவிகள் கண்காட்சி

image

சேலம் இரும்பாலை சாலையில் ஆவின் பால்பண்னை எதிரில் மாவட்ட அரசு இசைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த அரசு இசைப்பள்ளியில் புகைப்படம், இசைக் கருவிகள் குறித்த கண்காட்சி வரும் செப்.19 முதல் செப்.21 வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார். கண்காட்சியின் முக்கிய அம்சமாக இசை இலக்கண, செயல்முறை சார்ந்த அம்சங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.

News September 12, 2024

சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

image

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சேலம் வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து கண்ணூருக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. செப்.14- ல் சென்னை சென்ட்ரலில் இருந்து கண்ணூருக்கும், செப்.16- ல் கண்ணூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் இயக்கப்படும் சிறப்பு ரயிலில், 12 முன்பதிவில்லா பெட்டிகளுடன், சில முன்பதிவு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 12, 2024

Disney+ Hotstar இணையத் தொடரில் சேலம் சிறுவன்!

image

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளி வந்த “கோலிசோடா” திரைப்படம் தற்போது “கோலிசோடா ரைசிங்” என்ற பெயரில் இணையத் தொடராக நாளை (செப்.13) Disney+ Hotstar- ல் வெளியாகவிருக்கிறது. இதில் சேலத்தைச் சேர்ந்த குழந்தை நட்சத்திரம் வசியன் பிரபாகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் மாமன்னன் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 12, 2024

சேலத்தில் கேத்லேப் மூலம் 1,186 பேருக்கு சிகிச்சை

image

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேத்லேப் மூலம் கடந்த 7 மாதங்களில் மட்டும் 1,186 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கேத்லேப் மூலம் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை துல்லியமாகத் தெரிந்து கொள்ள கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 12, 2024

சேலம்: 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

image

இடையப்பட்டி ஊராட்சி நெய்யமலை கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சின்னதுரை (9). பூபதி மகன் கமலேஸ்வரன் (9). இரு சிறுவர்களும் நேற்று மாலை பள்ளி முடிந்ததும், விவசாயி பழனிசாமி என்பவரது கிணற்றில் குளிக்க இறங்கி நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சிறுவர்கள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News September 12, 2024

சேலம்: சுயதொழில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

image

சேலம் மாவட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க மானியம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு <>www.tnwidowwelfareboard.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2024

சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

image

ஹுப்ளி- கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. செப்.13ல் ஹூப்ளியில் இருந்து கொச்சுவேலிக்கும், செப்.14- ல் கொச்சுவேலியில் இருந்து ஹூப்ளிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சேலம், ஈரோடு,திருப்பூர்,கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் ரயில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2024

சேலம்: காலமானார் திமுக முக்கிய நிர்வாகி!

image

கெங்கவல்லி திமுக முன்னாள் பேரூர் செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஷேக்மொய்தீன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். இதனையடுத்து அவரது உடலுக்கு கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் சின்னதுரை, பேரூர் செயலாளர் பாலமுருகன், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

News September 11, 2024

திருமணிமுத்தாறை மீட்டெடுக்க சங்கராச்சாரியார் அழைப்பிதழ்

image

அகில பாரதீய சந்நியாசிகள் சங்கமும், திருமணி முத்தாறு பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இணைந்து சேலத்தில் திருமணிமுத்தாறை மீட்டெடுப்பது தொடர்பாக செப்.15ஆம் தேதி தொடங்கி செப்.26ஆம் தேதி வரை 12 நாள்களில் 12 வகையான மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விழா அழைப்பிதழை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காஞ்சிபுரத்தில் வெளியிட்டார்.

error: Content is protected !!