Salem

News September 15, 2024

சேலம்: அண்ணா சிலைக்கு தலைவர்கள் மரியாதை

image

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுகவின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News September 15, 2024

தேர்வு கடினம்: சேலத்தில் தேர்வு எழுதியோர் கருத்து

image

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தாரமங்கலம் பகுதியில் உள்ள பள்ளிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. தேர்வர்கள் காலை 8 மணி முதல் வந்து கொண்டே இருந்தனர். காலை 9 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வுகள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர். தேர்வை ஒட்டி அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

News September 15, 2024

சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதிக்கு அருகே மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமான சித்தேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என்.நேரு, சேலம் கலெக்டர் உட்பட முக்கிய நபர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News September 14, 2024

சேலத்தில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் சேலத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ➤ மேட்டூர் அணைக்கு 13,217 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. ➤ கொளத்தூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தில், மக்கள் அச்சமடைந்துள்ளனர். ➤ சேலத்தில் 162 மையங்களில் நடைபெற்ற குருப் 2 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

News September 14, 2024

சேலத்தில் இந்த தேதியில் டாஸ்மாக் மூட உத்தரவு

image

மிலாது நபியை முன்னிட்டு செப். 17ம் தேதி சேலத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை இயக்காது என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ (ம) எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் (ம) கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் கடைகள் (எப்.எல்.11), டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் மூட உத்தரவிட்டுள்ளார்.

News September 14, 2024

சேலத்தில் 35,909 பேர் தேர்வை எழுதினர்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வினை சேலம் மாவட்டத்தில் 46,856 தேர்வர்கள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 35,909 தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரிந்திருந்தனர். சேலம், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, வாழப்பாடி ஆகிய தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 162 தேர்வுக் கூடங்களில் இத்தேர்வு நடைபெற்றது.

News September 14, 2024

சேலம் திமுக நிர்வாகிகளுக்கு மா.செ அழைப்பு

image

சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.எம் செல்வகணபதி Mp வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்குதாரமங்கலம் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் நடைபெறுகிறது. இதையடுத்து அண்ணாவின் சிலைக்கு மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. பின்னர் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்படுகிறது.

News September 14, 2024

சேலம் அருகே விபத்து: ஒருவர் பலி

image

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஈஸ்வரி (45) தனது மகன் மணிகண்டன் (15) உடன் மொபட்டில் நிலவாரப்பட்டி உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை சர்வீஸ் சாலையில் ரோட்டை கடப்பதற்காக முயன்ற போது அவ்வழியே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 14, 2024

சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சேலம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதரவற்ற மகளிர் சுயதொழில் தொடங்க மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் என்பதற்கான சுய அறிவிப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை நகலுடன் சேலம் கலெக்டர் அலுவல அறையின் 126ல் உள்ள மாவட்ட சமூக நல அலுவலத்தில் விண்ணப்பத்தை வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.

News September 14, 2024

திருவீதி உலா வந்த வீரகணபதி… பக்தர்கள் பரவசம்!

image

விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் 7- ம் நாளான நேற்று (செப்.13) சேலம் கடைவீதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் ராஜகணபதி உற்சவர்களுக்கு வீரகணபதி, கிருஷ்ணா கணபதி அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் மாடவீதிகளில் கம்பீரமாக எழுந்தருளிய வீரகணபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

error: Content is protected !!