India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேட்டூர் அணை அரசு மீன்பண்ணை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.இப்பணியிடத்திற்கு தமிழில் எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.15900 முதல் ரூ.58500 வரை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு<

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக்.29க்குள் https://ibpsonline.ibps.in/ippbljul25/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நபர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை.நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (58); வெள்ளி வியாபாரி. இவரது மனைவி கவிதா (49). இவர்கள், நேற்று காலை தங்களுக்கு சொந்தமான காரில், சேலம் – அரூர் தேசிய நெடுஞ்சாலையில், அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காலை, 8:30 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்தகார், இருளப்பட்டி கானியம்மன் கோவில் எதிரே தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் கணவன் -மனைவி இருவரும் உயிரிழந்தனர்.விபத்து குறித்து போலீசார் விசாரணை!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண்மை விளைப் பொருட்களுக்கான மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார் சேலத்திற்கு ரூபாய் இரண்டு கோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் (http://www.agrimark.in.gov.in/)இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்

சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ரதிதேவி (28). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது ரதிதேவி, தான் வேலை பார்க்கும் இடத்தில் ஒருவருடன் பழகிவந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன், வீட்டில் இருந்த கத்தியால் ரதிதேவியை சரமாரியாகக் குத்தினார். இதில் ரதிதேவி உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் கண்ணனைப் கைது செய்து விசாரணை

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் மற்றும் இயற்கை இடர்பாடுகளில் சிக்கிய பொதுமக்களை பாதுகாப்பதற்காக அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரர்களின் விபரம் வெளியிடப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <

சேலம் ரெட்டிபட்டி ஜங்ஷன் ராம் தியேட்டர் அருகே முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த முதியவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த முதியவர் யார்? என்பது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை!

தீபாவளி ஷாப்பிங் செல்லும்போது, இருசக்கர வாகனத்தைப் பூட்டிவிட்டீர்களா என்பதை உறுதிசெய்து கொள்ளவும். மேலும் அதிக நகைகள் அணிவதையும், முன்பின் தெரியாதவர்களிடம் பேசுவதையும் தவிர்க்கவும் என சேலம் போலீசார் அறிவுறை.மேலும் உதவிக்கு காவல் துறை: 100, தீயணைப்புத்துறை: 101 ஆம்புலன்ஸ் 102, பெண்களுக்கான உதவி எண்: 1091, காணாமல்போன குழந்தைகள் மற்றும் பெண்கள் புகாரளிக்க: 1094 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.SHAREit
Sorry, no posts matched your criteria.