India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்ட நிர்வாகத்தால் ஓமலூர் டோல்கேட் அருகே உள்ள ஸ்ரீ பத்மவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் செப்.19ம் தேதி காலை 09.00 மணி முதல் ஆட்சியர் தலைமையில் கல்விக்கடன் மேளா நடைபெற உள்ளது. இளங்கலை, முதுகலை கல்லூரி மாணவ, மாணவிகள் கல்விக்கடன் மேளாவில் பங்கேற்று பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏஆர்ஆர்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகத்தில் திரையரங்குகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்க்கை சிறக்க வேண்டி சினிமா விநாயகர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில், மேயர் ராமச்சந்திரன், ஏஆர்ஆர்எஸ் மல்டிபிளக்ஸ் நிர்வாகிகள் கீதா ராமநாதன், டாக்டர் ராதிகா ராணி, ஸ்ரீரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளான நாளை (17.09.2024) அன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படுவதை யொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி கலெக்டர் டாக்டர் இரா.பிருந்தாதேவி தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சேலம் மாவட்டம், கருப்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.பிருந்தாதேவி, ஆகியோர் இன்று (16.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மாணவர் அணிக்கு ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை (செப்.18) அன்று சேலம் மாவட்ட திமுக கலைஞர் மாளிகையில் வழங்கப்பட உள்ளது. தகுதிகள்: 30 வயதிற்குள், டிப்ளோமா அல்லது பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். நேர்காணல் செப். 22ம் தேதி காலை 8.30 முதல் 11.30 வரை நடைபெறும் என சேலம் மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சேலம் கலெக்டர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 16ஆம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள், உறுப்பினர்கள் அட்டை மற்றும் பிற ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் பரிசீலனை செய்ய ஏதுவாக அவற்றை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) வருகிற 20ம் தேதிக்குள் நேரில் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள்
இயங்கி வருகின்றன. மேலும் நாளை புரட்டாசி மாதம் தொடங்குவதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் 7.48 கோடி ரூபாய்க்கு இறைச்சி விற்பனையானது.
சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 23,128 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு 94.82 கோடி ரூபாய் மதிப்பில் உதவி உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கூறினார்.
சேலத்தில் தனது வீட்டின் அருகே நடைபெறும் வார்டு கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் சேலம் மாநகராட்சி ஆணையரிடம் கூறியுள்ளார்.
ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 78 ரயில் நிலையங்களில் கூடுதலாக 1,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இத்தகைய நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.