India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், விசிக சார்பில் ஏற்கனவே நடத்தப்பட்ட இளைஞரணி மாநாட்டில் மது ஒழிப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மது ஒழிப்பு மாநாடு குறித்து விமர்சனம் செய்பவர்கள் இதை திருப்பி பார்க்க வேண்டும். 4 பேர் எம்எல்ஏ ஆனா போதும், எம்பி ஆனா போதும் என்கிற இயக்கம் அல்ல விசிக; விசிகவுடன் கருத்தியல் விவாதம் நடத்த எத்தனை பேருக்கு திராணி உள்ளது என்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சகுந்தலா (84). 1970ம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ‘சிஐடி சங்கர்’ படத்தில் அறிமுகமானதால், அதன் பிறகு ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். சகுந்தலா உடல்நலக்குறைவால் பெங்களூருவில் காலமானார். இவர் சேலம் அரிசிப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விசிக தலைவர் திருமாவளவன் இன்று வந்தார். அப்போது பேசிய அவர், “வி.சி.க. சார்பில் ஏற்கனவே நடத்தப்பட்ட இளைஞரணி மாநாட்டில் மது ஒழிப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மது ஒழிப்பு மாநாடு குறித்து விமர்சனம் செய்பவர்கள் இதை திருப்பி பார்க்க வேண்டும். ஈழ தமிழர்களுக்காக மாநாடு நடத்திய ஒரே கட்சி வி.சி.க. தான் என்றார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை நிவர்த்திச் செய்யும் பொருட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
கரூர், ஈரோடு, சேலம் வழியாக மதுரை- சண்டிகர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் எண் மாற்றப்பட்டுள்ளதாக சேலம் ரயில் கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, மதுரை- சண்டிகர் எக்ஸ்பிரஸ் (புதிய ரயில் எண் 20493), சண்டிகர்- மதுரை எக்ஸ்பிரஸ் (புதிய ரயில் எண் 20494) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு ரயில் பயணிகள் சேலம் ரயில் கோட்டத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களுக்கு சென்று அறிந்துக் கொள்ளலாம்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் அரசின் போக்குவரத்து விதிகளை மீறியும், மதுப்போதையிலும் வாகன ஓட்டியதாக 21 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்துச் செய்து ஓமலூர் வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர் சோதனையிலும், கண்காணிப்பிலும் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சேலத்தில் பழைய நாணயத்திற்கு ரூபாய் 36 லட்சம் தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் மூட்டை தூக்கும் தொழிலாளியிடம் ரூபாய் 3.82 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மோசடி செய்வது குறித்து ஹரியானாவில் பயிற்சி பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஓமலூர் அருகேயுள்ள வேடப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி மைதிலி (19). இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. நேற்று மாமனாருடன் மைதிலி ஜெராக்ஸ் எடுப்பதற்காக தாரமங்கலம் பஸ் நிலையம் வந்தார். அங்கிருந்து திடீரென மைதிலியை காணவில்லை. 8 மாத குழந்தையுடன் அவர் மாயமானார். இதுகுறித்து மைதிலியின் தாய் செல்வி தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் தாரமங்கலம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாரமங்கலம், காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டானூர், பெரியாம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, துட்டம்பட்டி, ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சீட்டுக்காகவும் ஓட்டுக்காகவும் விசிகவின் மதுவிலக்கு மாநாட்டில் பாஜகவை புறக்கணிக்கிறார்கள் என்று சேலத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.