Salem

News July 28, 2024

சேலம் கலெக்டர் அறிவுறுத்தல்

image

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு சுமார் 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி காவேரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. காவிரி கரையோரம் பொதுமக்கள் குளிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது, நீச்சல் உள்ளிட்ட எவ்வித செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

News July 28, 2024

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள்

image

சேலம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். உடன் கலெக்டர் டாக்டர். பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் எம்.பி டி.எம்.செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.கபீர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News July 28, 2024

மேட்டூர் அணையில் நீர் திறப்பு

image

காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், மேட்டூர் அணையில் இருந்து 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நகராட்சி, நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News July 28, 2024

மேட்டூர் ஆணை இன்று மதியம் 3 மணிக்கு திறக்கப்படுகிறது

image

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று மதியம் 3 மணிக்கு திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அணை திறப்பு குறித்து டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், முதல் கட்டமாக 12,000 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்படவுள்ளது. ஏற்கெனவே பயிரிடப்பட்டுள்ள குருவை பயிர்களின் பாசனம் மற்றும் ஆடி பேருக்கு விழாவிற்கு அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது.

News July 28, 2024

விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர்

image

சேலம் அடுத்த கன்னங்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், அருள், சேலம் எம்.பி.செல்வகணபதி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News July 28, 2024

சேலம் சென்டிமென்ட் கைகொடுக்குமா?

image

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை சேலத்தில் நடத்தலாம் என முடிவு செய்துள்ளாராம். ஏனென்றால் 2024ஆம் ஆண்டு பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டு அதிமுக தலைவர் ஜெயலலிதா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போன்றவர்கள் அங்கு தான் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வெற்றி பெற்றுள்ளனர். எனவே அந்த சென்டிமென்ட தான் விஜய் அங்கு மாநாடு நடத்த காரணமாக இருக்குமென பலரும் கூறி வருகின்றனர்.

News July 28, 2024

காவேரி ஆற்றில் செல்ஃபி எடுக்கத் தடை

image

சேலம் மாவட்டத்தில் காவிரியில் இருந்து 1.45 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துக் கொண்டிருப்பதால், காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், கரையோரங்களில் யாரும் செல்ல வேண்டாம், காவிரியில் குளிக்கவோ, படகு சவாரி செய்யவோ கூடாது என உள்ளூர் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்ஃபி எடுக்கக் கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

News July 27, 2024

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

image

சேலம் மேட்டூர் அணையில் தற்போதைய நிலவரப்படி, அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,18,296 கன அடியில் இருந்து 1,23,184 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் 101.700 அடியில் இருந்து 103 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், தற்போதைய நீர் இருப்பு 68,958 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும், குடிநீர் தேவைக்கு மின்நிலையம் வாயிலாக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

News July 27, 2024

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பதவியை நிரப்புக

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர், தேர்வாணையர் பதவிகளை நிரப்ப வேண்டும்; நிரந்தர பதிவாளரை நியமிக்கும் வரை ஐஏஎஸ் அதிகாரியை பதிவாளர் பொறுப்புக்கு நியமிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை விரைந்து விசாரித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News July 27, 2024

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்

image

சேலம் கோட்டை மைதானத்தில் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.பி பாஸ்கர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு கொண்டுவந்த நிதி பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டிக்கிறோம் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!