Salem

News July 31, 2024

சேலத்தில் 100 ஏரி நிரம்பும் உபரி நீர் திட்டம் இன்று திறப்பு

image

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி
மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு நிரப்பும் பணியினை மேச்சேரி அருகே உள்ள திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி மற்றும் சேலம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து வைத்தனர். இதுதொடர்பாக இபிஎஸ் நேற்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News July 31, 2024

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் 

image

சேலம் கலெக்டர் பிருந்தா தேவி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு (ம) அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களில் <>https://www.tnesevai. tn.gov.in/citizen/Registration.aspx<<>> என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

News July 31, 2024

இரண்டாவது நாளாக விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

image

மேட்டூர் அணையில் இருந்து காவேரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஈரோடு (ம) சேலம் மாவட்டத்தை இணைக்கும் வகையில் நடைபெற்று இருந்த விசைப்படகு போக்குவரத்து இன்று இரண்டாவது நாளாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

News July 30, 2024

காவேரி கரைப்பகுதியில் கலெக்டர் ஆய்வு 

image

சேலம், மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரிநீர் திறப்பட்டுள்ளதையொட்டி, மேட்டூர் வட்டம், தங்கமாபுரிப்பட்டணம், பெரியார் நகர் பகுதியில் காவிரி கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று இரவு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். உடன் மேட்டூர் சார் ஆட்சியர் நே.பொன்மணி, உள்ளார்.

News July 30, 2024

மேட்டூர் அணையில் கலெக்டர் ஆய்வு

image

சேலம், மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ரா.இராஜேந்திரன், உடன் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News July 30, 2024

காவேரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

image

மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவேரி கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆற்றில் குளிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டுவது, நீர்நிலைகளுக்கு அருகில் சென்று செல்பி எடுப்பது போன்ற ஆபத்தை விலைக்கும் செயல்களை மேற்கொள்ளக்கூடாது என்று கலெக்டர் டாக்டர். பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

மேட்டூர் அணை திறப்பு

image

சேலம், மேட்டூர் அணையின் மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய்களில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் இன்று திறக்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், சதாசிவம் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். இன்று முதல் டிசம்பர் 13வரை 137 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

News July 30, 2024

மேட்டூர் அணை ஒரு பார்வை

image

மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணையில் ஒன்றாகும். காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம் மேட்டூரில் 1925ஆண்டு துவங்கி 1934ஆம் ஆண்டு கர்னல் எல்லீஸ் வடிவமைப்பின் படி ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது. அணையின் உயரம் (ம) அகலம் 214 மற்றும் 171 அடி ஆகும். இந்த அணையில் அதிகபட்சம் சேமிப்பு 120 அடி ஆகும். இந்த அணையால், 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

News July 30, 2024

மேட்டூர் அணையை பார்வையிட்ட சௌமியா அன்புமணி

image

சேலம், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலத் தலைவர் சௌமியா அன்புமணி, நீர்தேக்கப் பகுதிகளையும், உபரிநீர் போக்கி அமைந்துள்ள 16 கண்பாலம் பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆய்வின்போது மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், அதிகாரிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News July 30, 2024

ஆயுஷ் மருத்துவமனைகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

image

சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆயுஷ் தொடர்பான மருத்துவமனைகள், சிகிச்சையையும் மற்றும் ஆரோக்கிய மையங்கள் போன்றவற்றை நடத்தும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கு இச்செய்தி வெளியிட்ட 2 வாரங்களுக்குள் https//:indianfrro.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!