Salem

News August 1, 2024

திமுக மாவட்ட செயலாளர் நேரில் அஞ்சலி

image

சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் இன்று காலை 9 மணி அளவில், முல்லைவாடி பகுதியில் வசித்து வந்த, மறைந்த சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பன்னீர்செல்வத்தின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நகர மன்ற உறுப்பினர் சம்பத் மற்றும் மதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் கோபாலசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

News August 1, 2024

பொதுமக்களுக்கு சேலம் ஆட்சியர் வேண்டுகோள்

image

மேட்டூர் அணையிலிருந்து 1.7 லட்சம் கனஅடிக்கு மேல் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மேட்டூர் அணைக்கு வருவதை பாதுகாப்பு நலன் கருதி தவிர்த்திட வேண்டும். ஆடிப்பெருக்கு விழாவின்போது பொதுமக்கள் காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News August 1, 2024

சேலத்தில் பார்வை கொடுத்த திமுக நிர்வாகி

image

சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம். இவர் சேலம் இலக்கிய அணியின் மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் நேற்று உயிரிழந்தார். உடனடியாக அவருடைய குடும்பத்தினர் கண்தானத்தை ஆதவன் அரிமா சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். அரிமா சங்க நிர்வாகிகள் குடும்பத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

News August 1, 2024

சேலம் அருகே மூத்த திமுக நிர்வாகி காலமானார்

image

சேலம் கிழக்கு மாவட்டம் கலை இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற துணை தலைவருமான
முல்லை பன்னீர்செல்வம் நேற்று மாலை காலமானார். அவருக்கு ஆத்தூர் நகர திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அவர் வசிக்கும் முல்லை வாடி பகுதியில் உள்ள பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது உடல் இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

News August 1, 2024

மக்களுடன் முதல்வர் முகாம் தேதி அறிவிப்பு

image

சேலம் கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்ததாவது,
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நாளை (2.08.2024) ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
மாரமங்கலம், தலைசோலை, வாழவந்தி
மற்றும் ஏற்காடு ஆகிய 5 இடங்களுக்கு ( ஏற்காடு பழைய ஊராட்சி அலுவலக கட்டிடம்) சிறப்பு மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

சேலத்திலிருந்து சிறப்பு பேருந்துகள்

image

ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பர். வரும் 3ஆம் தேதி சேலத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கும், ஆக.4ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சேலத்திற்கும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ˆwww.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

News July 31, 2024

உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கலெக்டர் ரா.பிருந்தாதேவி, தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, மாவட்ட வழங்கல் அலுவலர் சே.கணேஷ், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ப.இரவிக்குமார்,உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.கதிரவன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News July 31, 2024

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி

image

இன்று கோவை மத்திய சிறையில் இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்துச் சென்றபோது, நடு வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

News July 31, 2024

ஒப்பந்த அடிப்படையில் பணி உடனே விண்ணப்பிக்கலாம்

image

சேலம் கலெக்டர் பிருந்தா தேவி நேற்று தெரிவிக்கையில், வட்டார வள பயிற்றுநர்கள் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்: 207, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சேலம் என்ற முகவரிக்கு 6.08.2024 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார். 

News July 31, 2024

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

image

தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்திற்கும் மேல் கனஅடி நீர் வெளியேறிவருகிறது. விரைவில் 1.75 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் என்றும், எனவே காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சேலம் ஆட்சியருக்கு மேட்டூர் செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!