Salem

News September 28, 2024

சேலத்தில் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் கவனத்திற்கு

image

உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் நாளை செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இம்முகாம்களில் தங்களது செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி போட்டு செல்லப்பிராணிகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News September 27, 2024

கல்லூரியில் தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

சேலம் ஸ்ரீசக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் ‘தூய்மையே சேவை’ இருவார விழாவினை முன்னிட்டு, ‘தூய்மைப் பணியில் இளைஞர்களின் பங்கு’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெரியார் பல்கலைக்கழகத்தின் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் கலந்து கொண்டு தூய்மையான, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதில் இளைஞர்கள் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.

News September 27, 2024

வார இறுதி நாட்களையொட்டி சிறப்பு பஸ்கள்

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பண்டிகை மற்றும் முக்கிய திருவிழா நாட்களில் சேலம் கோட்டத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று (செப்.,27) முதல் 30-ந் தேதி வரை சேலம் கோட்டம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

News September 27, 2024

BREAKING போலீசாரை கற்களை வீசி தாக்கியதால் துப்பாக்கிச்சூடு

image

கற்களை வீசி போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தப்பிச் சென்ற இருவரில் ஜூமான் என்பவர் போலீசாரைத் தாக்கியதால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். பணப்பையுடன் ஓடிய அஸ்ரூவை காலில் சுட்டுப்பிடித்தோம். எவ்வளவு பணம் என்பது கணக்கிடவில்லை. பிடிக்கப்பட்ட 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா தெரிவித்துள்ளார்.

News September 27, 2024

துப்பாக்கியுடன் சிக்கிய வடமாநில கும்பல்

image

குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் இன்று காலை ஒரு கண்டெய்னர் லாரி, வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு அதிவேகமாக நிற்காமல் சென்றுள்ளது. தொடர்ந்து, போலீசார் அந்த லாரியை விரட்டிச் சென்று மடக்கியபோது உள்ளே சில வட மாநில இளைஞர்கள் துப்பாக்கியுடன் இருந்தது தெரியவந்தது. அப்போது, தப்ப முயற்சித்தவர்களை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

News September 27, 2024

கிடுகிடு என குறையும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்

image

இன்று (செப்.27) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3,355 கன அடியிலிருந்து 2,694 கன அடியாக அமைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 98.030 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 62.316 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

News September 27, 2024

சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் 80 வனத்துறையினர்

image

சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையைப் பிடிக்க 6 கூண்டுகள் வைத்தும், 16 கண்காணிப்புப் கேமிராக்கள், 3 டிரோன் கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 80 வனத்துறையினர் இரவு, பகல் என 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 27, 2024

MSME நிறுவனங்களுக்கு ரூ.4,004.77 கோடி கடனுதவிகள்

image

சேலம் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 10,210.69 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டு முதல் காலண்டில் ரூபாய் 3,689.49 கோடி மற்றும் இரண்டாவது காலண்டில் ரூபாய் 315.28 கோடி என மொத்தம் இதுவரை 20,167 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 4,004.77 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News September 27, 2024

கூடைப்பந்து போட்டியில் சேலம் மாணவர்கள் அசத்தல் வெற்றி

image

வேலூரில் உள்ள ஸ்ரீஷ்டி வித்யாஸ்ரமம் மேல்நிலைப்பள்ளியில் ‘CBSE CLUSTERS’ என்ற பெயரில் நடந்த ஆண்கள், பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் சேலம் எருமாப்பாளையத்தில் அமைந்துள்ள குளூனி வித்யா நிகேதன் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி, 3ஆம் இடம் பிடித்து அசத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பையும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

News September 26, 2024

சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், செப்.28ஆம் தேதியும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

error: Content is protected !!