India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைகளில், குழந்தைகள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதைப் பெற்றோர் கண்காணித்து உறுதிச் செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கவனமுடன் கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், கெங்கவல்லி அருகே உள்ள கீழ்பாலத்தாங்கரை மலை கிராமத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 3 கன்று குட்டியை சிறுத்தை வேட்டையாடியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மதியம், மாலை நேரங்களில் சிறுத்தை உலா வருவதாக அச்சம் தெரிவிக்கும் மலைவாழ் மக்கள், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம், சோனா கல்வி நிறுவனத்தின் சோனா கிரிக்கெட் அகாடமி சார்பில் நடைப்பெற்ற நிகழ்வில் நடிகர் மற்றும் கிரிக்கெட் வீரரான பாஸ்கி கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்பு கலந்துரையாடினார். அவர் பேசும் போது இன்றைய சூழலில் மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும், விளையாட்டினால் உடல் வலிமையுடன் மனவலிமையை அடைய முடியும். இன்றைய வாழ்க்கை சூழலில் இது முக்கியமான ஒன்றாகும் என்றார்.
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகளை தி.மு.க. இன்னும் நிறைவேற்றவில்லை; தி.மு.க. ஆட்சிக்கு வந்து 40 மாதங்கள் ஆன போதிலும் 10% வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை; சேலம் கால்நடை பூங்காவை ஏன் திறக்கவில்லை?” என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்டவற்றை வழங்குவதாகக் கூறி, பொதுமக்களிடம் தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டு கட்சியில் உறுப்பினராகச் சேர்த்துள்ளனர். இது குறித்த குறுஞ்செய்தி சம்மந்தப்பட்ட மக்களுக்கு வந்த நிலையில், தகவலறிந்த தி.மு.க.வின் மகளிரணி நிர்வாகிகள், பா.ஜ.க.வினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று (செப்.28) காலை 06.00 மணி வரை 218.6 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வாழப்பாடியில் 71 மி.மீ, ஆனைமடுவுவில் 50 மி.மீ., எடப்பாடியில் 36 மி.மீ., மேட்டூரில் 24.4 மி.மீ., ஏற்காட்டில் 14.2 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சேலம் மாநகர பகுதிகளில் 4.6 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் 2,033 பேர் பரிசுகளை வென்றனர். இதில் மாவட்ட அளவில் 653 பேர் முதலிடம் பெற்று மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக சேலம் கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர், பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஷர்மிலி என்பவர், அவரது தந்தையின் ஓய்வூதிய பணத்தை பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அவரது தந்தையின் ஓய்வூதிய பணத்தை கொடுப்பதற்கு கருவூல அலுவலர் தனபால் ரூ.5000 லஞ்சம் கேட்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தனபாலை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர்.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற இயல்புக் கூட்டம் நேற்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி பெற மாநகராட்சி அதிகாரிகள் 35% வரை லஞ்சம் பெறுவதாக குற்றஞ்சாட்டினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கும் கருவூல அலுவலகத்தில் இன்று மதியம் 2 மணி அளவில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். கடந்த வாரத்தில் மட்டும் மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவதனால் பெரும் பரபரப்பில் அதிகாரிகள் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.