Salem

News August 6, 2024

சேலம் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு

image

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நாளை (ஆகஸ்ட் 7) சேலம் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலகம், சார்நிலைக் கருவூல்கள் செயல்படும். நாளைய உள்ளுர் விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்ட் 31ஆம் தேதி பணிநாளாகச் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 6, 2024

நிலவேம்பு குடிநீர்: சேலம் கலெக்டர் அறிவுறுத்தல்

image

‘உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பக்க விளைவுகள் இல்லாத சித்த மருத்துவத்தின் மூலம் அதிகரிக்க செய்யலாம். டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக நிலவேம்பு குடிநீரினை சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று அருந்தி பயன்பெற வேண்டும்’ என்று சேலம் மாவட்ட பொதுமக்களுக்கு சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.

News August 6, 2024

பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

image

‘உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பக்க விளைவுகள் இல்லாத சித்த மருத்துவத்தின் மூலம் அதிகரிக்க செய்யலாம். டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக நிலவேம்பு குடிநீரினை சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று அருந்தி பயன்பெற வேண்டும்’ என்று சேலம் மாவட்ட பொதுமக்களுக்கு சேலம் ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.

News August 5, 2024

பூம்புகார் விற்பனை நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

image

சேலம், அண்ணா பட்டு மாளிகை வளாகத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தினை தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநர் அமிர்தஜோதி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிருந்தாதேவி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது துறை சார்ந்த அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

News August 5, 2024

இலவச மருத்துவ முகாம்

image

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு கைத்தறி துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் (7.08.2024) புதன் கிழமை அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை, கொண்டலாம்பட்டியில் உள்ள எம்.அருணாச்சல செட்டியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

மேட்டூர் அணை அன்றும், இன்றும்

image

மேட்டூர் அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகளில் தற்போது 43வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதுவரை 71வது முறையாக 100 அடியை எட்டிய பின் அணை திறக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணையின் 15 நாள்களுக்கு முன், பின் என அதன் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. தற்போது 50,000 கன அடி நீர் திறக்கப்படுவதாக கூறப்படுகிறது.

News August 5, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி சக்கர நாற்காலி

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (05.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மகிழ்நன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News August 5, 2024

ஆக.14: அறிவித்தார் சேலம் கலெக்டர்!

image

சேலம் கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த
முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் ஆக.14ஆம் தேதி கலெக்டர் ஆபிசில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்கள், தற்போதைய படைவீரர்களை சார்ந்தவர்களும் தங்களது கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக நேரில் மனுவாக சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News August 5, 2024

ஆத்தூரில் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி

image

ஆத்தூர் அருகே தம்மம்பட்டி அருகே கணவாய் காடு பகுதியில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி, நேற்று மாலை 6.30 மணி அளவில் விபத்து ஏற்பட்டது. மேற்கு ராஜபாளையத்தை சேர்ந்த பெரியசாமி, அவரது மகன் தரணி ஆகியோர் வந்த பைக்கும், மல்லியகரை நோக்கி வந்த கவிமணி, விக்னேஷ் ஆகியோர் வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் பெரியசாமி, கவிமணி உயிரிழந்தனர். தரணி, விக்னேஷ் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News August 5, 2024

சேலம் திமுக மாவட்டச் செயலாளர் அறிக்கை

image

சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாள் நாளை மறுநாள் (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு வாழப்பாடி பஸ் நிலையத்தில் இருந்து, வாழப்பாடி கட்சி அலுவலகமான மு.க.ஸ்டாலின் அறிவாலயம் வரை அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார்.

error: Content is protected !!