India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் நவம்பட்டி செக்கனுர் பாலம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மேட்டூர் காவல் நிலையத்தில் இருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி சோதனையிட்டனர். முழுவதும் அழுகி இருந்ததால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தானாக இறந்தாரா இல்லை அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் ஸ்கொயர் மார்க்கெட் பகுதியில், நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிலையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், மேட்டூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில், மறைந்த வீரப்பனின் மகள் வித்யா வேட்பாளராக அறிவிக்கப்படுவதாக, சீமான் அறிவித்துள்ளார்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி வெளியிட்டுள்ள உத்தரவில்; சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், சங்கங்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், போராட்டங்கள் நடத்துவது ,உண்ணாவிரதம் மேற்கொள்வது, விழிப்புணர்ச்சி நிகழ்த்துவது நடத்துவதோ, ஐந்து நாட்கள் முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர்.18) “வாகனம் ஓட்டும் போது சாலையில் கவனம் தேவை தொலைபேசியில் அல்ல.” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <

இந்திய ரயில்வேயால் இயக்கப்படும், அதிவிரைவு ரயில்வே சேவையான அம்ரித் பாரத் ரயில், இந்த ரயில் சேவையானது, சென்னையிலிருந்து புறப்பட்டு, சேலம் வழியாக கோவை வரை இயக்கப்படுகிறது. குறைந்த கட்டணத்துடன், ஸ்லீப்பர் மற்றும் அதிகப்படியான முன்பதிவு அல்லாத பெட்டிகளை கொண்டு இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் முதல் இயக்கப்படுவதாக, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மோகன்குமார் (30), அடிக்கடி உடல்நலக்குறைவால் மனமுடைந்து நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண்மை விளைப் பொருட்களுக்கான மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். சேலத்திற்கு ரூபாய் இரண்டு கோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் (http://www.agrimark.in.gov.in/) இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.SHAREit

சேலம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.