India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு டீனாக பவானி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவி மீனாள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேவி மீனாள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் குறிப்பிடத்தக்கது.
டெங்கு உள்ளிட்ட பருவகால காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ளவும், வீடுகள், தொழிற்சாலைகள், பொது இடங்கள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்கும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக அப்புறப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு
சேலம் ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வைகுந்தம் அருகே சூட்கேசில் சடலமாக கிடந்தது 18வயது இளம்பெண்ணை தலையில் அடித்து கொன்று வீசி உள்ளனர் என்று காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. தொடர்ந்து 6 தனிப்படைகள் அமைத்து சங்ககிரி துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு சேலத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தின் மீது திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் பெட்ரோல் குண்டு வீசியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக அதன் தலைவர் கொளத்தூர் மணி உட்பட ஐந்து பேர் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற உலகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (அக்.03) நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரனை சென்னையில் உள்ள அவருடைய அலுவலகத்தில் இன்று சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் என்றும் உங்களுக்கு துணையாக நிற்போம் என்று சேலம் மாநகராட்சி துணை மேயர் கூறினார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த ராமநாயக்கன்பாளையத்தில் 10ம் வகுப்பு மாணவர் அபிஷேக், தான் பயன்படுத்தி வரும் சாதாரண சைக்கிளில் 30 கிமீ வேகத்திறன் கொண்ட பேட்டரியைப் பொருத்தி, வெறும் 1 ரூபாய் செலவில் பள்ளிக்கு சென்று வருகிறார்.
பள்ளிக்கு செல்ல தினமும் 45 நிமிடங்களுக்கு மேல் ஆவதாக தெரிவித்துள்ள அவர், இந்த சைக்கிள் மூலம் தற்போது 15 நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைவதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் அதற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் (அக்டோபர் 1) ஒரேநாளில் ரூ.9.19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது. தினமும் சராசரியாக ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை மது விற்பனை நடைபெறும் என்பது கவனிக்கத்தக்கது. இது குறித்து உங்களது கருத்து என்ன மக்களே?
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை (அக்.03) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாவட்டம், அம்மாபேட்டை ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் கல்விக்கடன் மேளா நடைபெறவுள்ளது. இம்முகாமில் கல்விக்கடன் தேவைப்படும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து சேலம் மாவட்டத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பயனடையும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீபாவளியையொட்டி சேலம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புபவர்கள் இணையதளத்தில் வரும் 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அருகில் உள்ள இ-சேவை அல்லது பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.