India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிங்கிபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாழப்பாடி, மேற்கு ராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், மத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.
அயோத்தியாப்பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும், காருண்யா என்ற மாணவி, சில மாதங்களுக்கு முன்பு, மாநில அளவில் ராஜஸ்தானில் 17 வயது உட்பட்டவர்களுக்கு நடைபெற்ற கபடிப்போட்டியில், தமிழ்நாடு அணி சார்பில் விளையாடி, தங்கப்பதக்கம் பெற்றார்.இதனால், இன்று சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி, அரசு பள்ளியில் காருண்யாவை நேரில் சந்தித்து, மாணவிக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்துவரும் ஏ.கே.அருண் கபிலன் நாகை எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கவுதம் கோயல் புதிய எஸ்பியாக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர் தற்போது தாம்பரம் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்துவருகிறார். அதேபோல் சேலம் மாநகர தெற்குப்பகுதி காவல் துணை ஆணையராக இருந்துவரும் மதிவாணன் வேலூர் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் இன்று ஆய்வு செய்து அரசினர் தொழில் பயிற்சி மையத்தில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி மையம் 4.0 மையத்தை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது எம்எல்ஏ ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. எனவே, மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் பொருளாதார ரீதியில் மேம்பட கொண்டுவரப்பட்ட “SEED” திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ளவர்கள் https://dwbdnc.dosje.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டார்.
சேலம் மாவட்டத்தில் இன்று (ஆக.8) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும். அவை: வாழப்பாடி, புதிர்கவுண்டபாளையம் ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி, சமுத்திரம், காந்திபுரம், அண்ணாநகர், நல்லவன்பாளையம், ஆத்தூர் தடவூர் நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு. ஷேர் பண்ணுங்க!
சிங்கிபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை (ஆக.9) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும். அவை: வாழப்பாடி, மேற்கு ராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், மத்தூர், சிங்கிபுரம், பெரிய கிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன்பட்டி.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. THRIVENI CAR COMPANY என்ற தனியார் நிறுவனம் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறுகிறது. இந்த நிறுவனம் ரூ 10,000 முதல் ரூ 25,000 வரை ஊதியம் வழங்குகிறது. இதற்கு 10ம் வகுப்பு முதல் எந்த பட்டப்படிப்பு வரையிலும் வேலை தேடுபவர்கள் பங்கேற்கலாம்.
சேலம், கொண்டலாம்பட்டியில் 10- வது தேசிய கைத்தறி தினம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்து நேரில் பார்வையிட்டனர்.
Sorry, no posts matched your criteria.