Salem

News August 13, 2024

சேலம்: ஆகஸ்ட் 15.. டாஸ்மாக், மதுக்கடைகள் மூடல்

image

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “சுதந்திர தின விழா நாளை மறுநாள் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்படுகிறது. எனவே, அன்று மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும். அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார.

News August 13, 2024

பாம்பை பிடித்த 9ஆவது வார்டு கவுன்சிலர்

image

சேலம், அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனி உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இன்று பாம்பு புகுந்தது அப்பொழுது பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே வந்து பாம்பினை மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் லாபகமாக பிடித்து வெளியேற்றினார். அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

News August 12, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள்

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (12.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக்கருவிகளை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மகிழ்நன் உள்ளார். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர்.

News August 12, 2024

கட்டணமில்லா இருதய அறுவை சிகிச்சை

image

தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சென்னையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை சென்னைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். பிருந்தாதேவி இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து அனுப்பி வைத்தார்.

News August 12, 2024

குழந்தை கடத்தில் திடுக்கிடும் தகவல்(1/2)

image

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாள்களே ஆன குழந்தை கடத்தல் தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அப்பெண் தனக்கு கருக்கலைப்பு ஏற்பட்டதால் குழந்தையை திருடி உறவினர்களிடம் காண்பித்து கொள்ளலாம் என விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் தான் தற்போது திடுக்கிடும் வகையில் தகவல் வெளியாகியுள்ளது. (தொடர அடுத்த பக்கம் திருப்பவும்)

News August 12, 2024

குழந்தை கடத்தில் திடுக்கிடும் தகவல் (2/2)

image

அப்பெண், குழந்தையை கடத்தி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது. அங்கு அட்மிசன் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் காலை 11.30 மணிக்கு நடந்துள்ளதாகவும், 1 மணிக்கு தனியார் மருத்துவமனையில் எப்படி அட்மிசன் போடப்பட்டது? போலீஸ் சார்பில் 12 மணிக்கெல்லாம் குழந்தை காணவில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை தனியார் மருத்துவமனை ஏன் தகவல் அளிக்கவில்லை? என சந்தேகம் எழும்பியுள்ளது.

News August 12, 2024

சேலம்:உயிர் பிழைக்க குதித்த டிரைவர் உயிரிழப்பு

image

தலைவாசல் அருகே டிராக்டர் கவிழ்து 6 பேர் பாலத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர். சாத்தப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் டிராக்டர் ஒட்டிவந்த சம்பத் பரிதாபமாக உயிரிழந்தார்.டிராக்டர் கவிழ்ந்த போது உயிர் பிழைக்க குதித்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

News August 12, 2024

சேலம்: காரில் கடத்திய ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல்

image

ஓமலூர் அருகே ஜோடுகுளி என்ற இடத்தில் கார் ஒன்று ஓட்டல் முன்பு நின்றது. போலீசார் டிரைவரிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரித்துள்ளனர். காரின் பின்பக்க கதவை திறந்து காண்பிக்குமாறு கூறியுள்ளனர். டிரைவர் காரை விட்டு இறங்கி தப்பி ஓடினார். பின்னர் காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு காரை சோதனை செய்தபோது காரில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

News August 11, 2024

சேலத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

image

மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கி வழியாக உபரிநீர் எந்நேரமும் திறக்க வாய்ப்பிருப்பதால், காவேரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது என்று வருவாய்த்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News August 11, 2024

சேலம்: சிறையில் கைதி மாரடைப்பால் உயிரிழப்பு

image

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன்(31) என்பவர் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தண்டனை கைதியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!