India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காலாவதியான PLI/RPLI பாலிசிகளைப் புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம் வரும் மார்ச் 01 முதல் மே 31 வரை அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெறுகிறது.பாலிசிகளை புதுப்பிக்கும் போது செலுத்த வேண்டிய தாமதக் கட்டணத்தில் 25% முதல் 30% தள்ளுபடியை அஞ்சல்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வேண்டுகோள்!

தமிழகத்தில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று காலை முதல் சில பகுதியில் லேசான சாரல் மற்றும் மிதமான மழை பெய்யது. கடந்த இரண்டு நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், காலையில் பெய்த சாரல் மழையால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று பிப்ரவரி 28 ‘SAY NO TO DRUGS’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

சேலம் வீராணம் பகுதியில் உள்ள பசுபதி ஸ்கேன் சென்டரில் குழந்தை பாலினம் தெரிவிக்க தலா ரூ.15,000 வசூல்.புகாரின்பேரில் ஸ்கேன் சென்டரில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவித்து வந்த அரசு மருத்துவர் முத்தமிழ்,செவிலியர்கள் 6 பேர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்.ஸ்கேன் சென்டருக்கு சீல்- ஸ்கேன் சென்டரில் இருந்த இயந்திரங்களும் பறிமுதல்.

சேலம் குகையில் அருணாச்சல ஆசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சரஸ்வதி. இவருக்கு 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி அவர்களும் பேரன், பேத்திகளுடன் சேலம் குகையில் வசித்து வருகின்றனர். ஐந்து தலைமுறையை பார்த்த மூதாட்டி சரஸ்வதிக்கு இன்றுடன் 100 வயது பூர்த்தியாகிவுள்ளது. இதனை குடும்ப உறுப்பினர்கள் விழாவாக நடத்த முடிவு செய்து, இன்று சதாபிஷேக விழாவை உற்சாகமுடன் கொண்டாடினர்.

“தொகுதி மறுசீரமைப்புத் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும்; கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் இருவர் பங்கேற்பார்கள்; தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கருத்துக்களை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிப்போம்; தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. தான்” என சேலத்தில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேட்டி.

சேலம் கலெக்டர் பிருந்தா தேவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வரும் மார்ச் 8ஆம் தேதி ஆத்தூர் தேவியா குறிச்சியில் உள்ள தாகூர் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலை வாய்ப்பற்றவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறாலம்.

சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், இடைப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு நீதிமன்றங்களில், 2025ஆம் ஆண்டின் முதல் தேசிய மக்கள் நீதிமன்றம் மார்ச் 8ல் நடக்க உள்ளது. இது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை, விரைவாக, சமரச முறையில் தீர்வு காண உதவுகிறது.

சேலம் வழியே இயக்கப்படும் சாம்பல்பூர்- ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் (08311), ஈரோடு- சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (08312) சேவை வரும் மார்ச் முதல் வாரத்துடன் முடியவிருந்த நிலையில் மேலும் 2 மாதத்திற்கு அதாவது ஏப்ரல் கடைசி வரை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெண்ணங்கொடி முனியப்பன் சேலத்தின் காவல் தெய்வம் என்பார்கள். வெண்ணங்கொடி என்ற ஒரு வகை மரக்கொடி படர்ந்த பகுதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால் அப்பெயர் வந்தது. இக்கோவிலில் இன்னொரு அபூர்வ நம்பிக்கையுள்ளது. இக்கோவிலில் வேல் விளங்கு என்ற சிறிய இரும்புக் கம்பியைக் கொண்டு சாமிக்கு பூஜை செய்தால் தீய சக்திகள் விலங்கும் என்பது நம்பிக்கை. 24 மணி நேரமும் கோவில் திறந்து இருக்கும்.
Sorry, no posts matched your criteria.