India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற முன்னாள் செயலாளரும், 45வது கோட்டம் முன்னாள் வட்ட செயலாளருமான குகை பெருமாள் (74) கடந்த 8ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து இன்று அவரது வீட்டிற்கு நேரில் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கே.ஆர்.தோப்பூர் துணை நிலையத்தில் மின் பராமரிப்பு காரணமாக அலையனூர், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாபாடி, காரைச்சாவடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்பட்டி, செம்மண்கூடல், பாகல்பட்டி, கே.ஆர்.தோப்பூர், அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கிருஷ்ணம்புதூர், கரியாம்பட்டி, இரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆக.14) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பிஜி மாணவர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான சேர்க்கை ஆகஸ்ட் 14ஆம் தேதியும், பொது கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதியும் நடைபெற உள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கலாம் எனவும், போக்குவரத்து சற்றே பாதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “சுதந்திர தின விழா நாளை மறுநாள் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்படுகிறது. எனவே, அன்று மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும். அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார.
சேலம், அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனி உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இன்று பாம்பு புகுந்தது அப்பொழுது பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே வந்து பாம்பினை மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் லாபகமாக பிடித்து வெளியேற்றினார். அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (12.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக்கருவிகளை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மகிழ்நன் உள்ளார். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சென்னையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை சென்னைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். பிருந்தாதேவி இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து அனுப்பி வைத்தார்.
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாள்களே ஆன குழந்தை கடத்தல் தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அப்பெண் தனக்கு கருக்கலைப்பு ஏற்பட்டதால் குழந்தையை திருடி உறவினர்களிடம் காண்பித்து கொள்ளலாம் என விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் தான் தற்போது திடுக்கிடும் வகையில் தகவல் வெளியாகியுள்ளது. (தொடர அடுத்த பக்கம் திருப்பவும்)
அப்பெண், குழந்தையை கடத்தி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது. அங்கு அட்மிசன் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் காலை 11.30 மணிக்கு நடந்துள்ளதாகவும், 1 மணிக்கு தனியார் மருத்துவமனையில் எப்படி அட்மிசன் போடப்பட்டது? போலீஸ் சார்பில் 12 மணிக்கெல்லாம் குழந்தை காணவில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை தனியார் மருத்துவமனை ஏன் தகவல் அளிக்கவில்லை? என சந்தேகம் எழும்பியுள்ளது.
Sorry, no posts matched your criteria.