India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.
உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT
கோவையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று(14.8.24) பொறுப்பேற்று கொண்டார். மேற்கு மண்டல காவல்துறை தலைவராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி பணியிட மாறுதலில் சென்றார். இதையடுத்து புதிய மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாளை நடைபெறுகிறது. சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தேசிய கொடியினை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார் என ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
ஆத்தூர் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இளம்பெண் (21 வயது) ஒருவர் நின்று கொண்டிருந்தார். ரோந்து சென்ற போலீசார் அந்த பெண்ணை விசாரித்தபோது தி.மலையை சேர்ந்தவர் என தெரியவந்தது. ஆத்தூரை சேர்ந்த வாலிபருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு அவரை பார்க்க வந்ததாகவும், ஆனால் அவரது போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டதும் தெரியவந்தது. மகளிர் போலீசார் அவரிடம் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன் பாளையம் அருகே நேற்று மாலை சேலம் நோக்கிச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் (43) என்பவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா 2024 சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் 15.08.2024 அன்று நடைபெற்றுள்ளது. இச்சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, காலை 9.05 மணிக்கு தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரருக்கு கௌரவித்து, நற்சான்றிதழ்களை வழங்கயுள்ளார்.
➤சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு 2000 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. ➤மேட்டூர் அணை நடப்பாண்டில் 2ஆவது முறையாக 120 அடியை எட்டியது. ➤சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ➤சேலம் மாவட்டத்திற்கு இன்று இரவு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.