Salem

News October 19, 2024

244 முறையாக “தேர்தல் மன்னன்” வேட்புமனு

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மேட்டூர் தேர்தல் மன்னன் பத்மராஜன், 244ஆவது முறையாக நேற்று கேளரா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் கட்நத ஆகஸ்ட் தெலங்கானாவில் எம்.பி பதவிக்கு போட்டியிட 243 முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 19, 2024

2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ் மனைவி தற்கொலை

image

சேலத்தில் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் கோவிந்தராஜ். இவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் அவரது மனைவி சங்கீதாவும், அவர்களது 2 குழந்தையும் இறந்த நிலையில் இருந்தனர். விசாணையில் 2 குழந்தைகளை கொன்று விட்டு சங்கீதா தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. மேலும், போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

News October 19, 2024

வெள்ளிப் பதக்கம் வென்று சேலம் வீராங்கனை அசத்தல்

image

ஆந்திர மாநிலம், குண்டூரில் நடைபெற்ற 35-வது தென்மண்டல அளவிலான தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 20 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் போல்வால்ட் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை சௌந்தர்யா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். பதக்கம் வென்ற மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

News October 18, 2024

வெண்கலப் பதக்கம் வென்ற சேலம் மாணவி

image

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன.இதில் சேலம் ஏவிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவி அபிநயா, நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும், ரூபாய் 50,000 பரிசுத் தொகையையும் வென்று அசத்தினார். மாணவி கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

News October 18, 2024

நாளை சேலம் வரும் துணை முதல்வர் 

image

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை(19.10.24) தமிழகத்தின் துணை முதல்வர் இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேலம் வருகிறார். அவரை தலைவாசல் டோல்கேட்டில் உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்று சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர்.வி. ஸ்ரீராம் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.

News October 18, 2024

செயல்பாட்டுக்கு வரும் நகரும் படிக்கட்டுகள்

image

சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகளை வரும் அக்.20-ம் தேதி சேலத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பேருந்து பயணிகளுக்கு அர்ப்பணிக்கிறார். அதேபோல், சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

News October 18, 2024

எதிர்பார்ப்பு இல்லாமல் உழைப்பவர்களுக்கு பதவி: ஆனந்த்

image

சேலம், ஆத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டு பேசும்போது, தமிழக வெற்றி கழகத்தில் பதவி நிரந்தரமானது அல்ல. எதிர்பார்ப்பு இல்லாமல் உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்கும் என தெரிவித்தார். மாவட்ட தலைவர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

News October 18, 2024

காலில் விழக்கூடாது: புஸ்ஸி ஆனந்த்

image

ஆத்தூர் கொங்கு திருமண மண்டபத்தில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் பயிற்சி முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது தாய், தந்தை காலில் மட்டும் விழ வேண்டும், மற்றவர்கள் காலில் விழக்கூடாது என கூறினார்.

News October 18, 2024

தமிழக வெற்றிக் கழக அரசியல் பயிலரங்கம் தொடக்கம்

image

தமிழக வெற்றிக் கழக மாநாட்டை முன்னிட்டு பணிக்குழுக்களுக்கான அரசியல் பயிலரங்கம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் இன்று (அக்.18) காலை தொடங்கியது. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாநாட்டை நடத்துவது உள்ளிட்டவைப் பயிலரங்கில் இடம் பெறுகின்றன. த.வெ.க.வினரின் வருகையால் ஆத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

News October 18, 2024

தவெக நிர்வாகிகளுக்கு இன்று அரசியல் பயிலரங்கம்

image

தவெகவின் முதல் மாநாடு குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று (18.10.24) காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்களுடன் நாளை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறுகிறது. வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெறவுள்ளதால், அதுகுறித்த ஆலோசனை நடைபெறவுள்ளது.

error: Content is protected !!