India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்துவருவது குறிப்பிடத்தக்கது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் சரகத்தில் (சேலம், தர்மபுரி மாவட்டங்கள்) போக்குவரத்து விதிகளை மீறியதாக, கடந்த ஒரு மாதத்தில் 171 பேரின் ஓட்டுநர் உரிமம் 3 மாதத்திற்கு ரத்துசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில் பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனர்.
1-ஆத்தூர் கல்லாநத்தம், துலுக்கனூர் பகுதிகளில் கனமழை
2-மேட்டூர் அணைக்கு குவிந்த சுற்றுலா பயணிகள்
3-சங்ககிரி சோமேஸ்வரர் கோவிலில் 108 கலச பூஜை
4-மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 26,000 கன அடியிலிருந்து 16,500 கன அடியாக குறைவு
சுற்றுலா தொழில்முனைவோர் விருதுக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது, சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
89398 96397 மற்றும் 0427- 2416449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.
சேலத்தில் விதிமுறையை மீறி செயல்படும் சாயப்பட்டறைகள் கண்டறியப்பட்டு அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 30க்கு மேற்பட்ட சாயப்பட்டறைகள் கண்டறியப்பட்டுள்ளது. சாயப்பட்டறைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் வாய்க்கால் கரை பகுதியில் செல்லமுத்து என்பவர் குமார் பத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகிறார். ஒற்றைக்கொம்பன் என்ற பசு இன்று மூன்று கன்றுகளை ஈன்றதால் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தோடு வந்து பார்த்து செல்கின்றனர். விவசாயி செல்லமுத்து மூன்று கன்று ஈன்ற ஒற்றைக்கொம்பன் பசுவால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவூர் பகுதியில் உள்ள மைலம்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் கே. தங்கவேலன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்ட அவருக்கு திமுக நிர்வாகிகள், ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
சேலத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அத்திகடவு-அவிநாசி திட்டம் கொங்கு நாட்டிற்கு மிகப்பெரிய திட்டமாகும். கொங்கு நாட்டில் பிறந்ததாக சொல்லும் அண்ணாமலை, இதுவரை கொங்கு நாட்டிற்கு ஒரு நல்லது செய்துள்ளாரா? அரசியல் ஆதாயம் தேடுவதையே திறமையாக கொண்டுள்ளார் என விமர்சித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (19.8.24) நடைபெற உள்ள ஆவணி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பல்வேறு வழித்தடங்களில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், ஆத்தூர், பெங்களூரு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 3 வது முறையாக நிரம்பி மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கி வழியாக உபரிநீர் எந்நேரமும் திறக்க வாய்ப்பிருப்பதால், காவேரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது என்று வருவாய்த்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.