Salem

News March 7, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மார்ச் 6 இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

News March 6, 2025

சேலம் வழியாக ஹோலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக வரும் மார்ச் 07, 14 தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கும், மறுமார்க்கத்தில், மார்ச் 10, 17 தேதிகளில் ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 6, 2025

சேலத்தில் 2-வது நாளாக சதமடித்த வெயில்!

image

சேலம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 06) 100.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர். பகல் நேரத்தில் சாலைகளில் ஆள் நடமாட்டம் குறைந்த அளவில் காணப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நேற்று 100.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

News March 6, 2025

சேலம் மத்திய சிறையில் கிளியை வளர்த்த கைதி

image

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் இருக்கும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சீவலப்பேரியன் (30) என்பவர், தனது அறையில் கிளி ஒன்றை வளர்த்து வருவதாக கிடைத்த தகவலின் படி, வார்டர் மாயவன் கிளியை பிடித்து பறக்க விட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கைதி வார்டரை தாக்கியுள்ளார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

News March 6, 2025

சேலத்தில் டிராகன் பட நடிகை!

image

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் டிராகன் திரைப்பட நடிகை கயாடு லோஹர் கலந்து கொண்டு பேசினார். மேலும், திரைப்பட பாடலுக்கு கல்லூரி மாணவிகளுடன் நடனம் ஆடினார். இதையடுத்து நடிகையுடன் மாணவவிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

News March 6, 2025

சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நீலகிரிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதால் மேட்டுப்பாளையம்- உதகமண்டலம் இடையே சிறப்பு ரயில்கள் வரும் மார்ச் 28 முதல் ஜூலை 06 வரை வாரத்தில் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் மேட்டுப்பாளையத்தில் இருந்தும்,மறுமார்க்கத்தில், வாரத்தில் சனிக்கிழமை, திங்கள்கிழமையில் உதகமண்டலத்தில் இருந்தும் ரயில் புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News March 6, 2025

‘மாநகரில் தனியார் பங்களிப்புடன் குடிநீர் திட்டம்’!

image

“கோடைக்காலம் தொடங்கிய நிலையில் குடிநீரைத் தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்தி விழிப்புணர்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது; மேலும் ‘அம்ரூத்’ 2.0 திட்டத்தில் மாநகராட்சிக்கென ரூபாய் 750 கோடியில் தனியார் பங்களிப்புடன் குடிநீர் திட்டம் நிறைவேற்ற தற்போது ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது” என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தகவல்!

News March 6, 2025

பள்ளிகள் அருகில் புகையிலை -136 கடைகளுக்கு சீல்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 136 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த கடைகளில் இருந்து ரூபாய் 2.30 லட்சம் மதிப்பிலான 251 புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு ரூபாய் 42.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 6, 2025

சேலம் மார்ச்.6 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மார்ச் 6 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 9:30 மணி செவ்வாய்பேட்டையில் பாஜக கையெழுத்து இயக்கம் ஆரம்பம். ▶️காலை 10 மணி அரசு மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா ▶️காலை 10 மணி விஸ்வ இந்து பரிசத் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் ▶️காலை 11 மணி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️காலை 11 மணி பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் சந்திப்பு கூட்டம்.

News March 6, 2025

சேலத்தில் வேலைவாய்ப்பு – ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் 08.03.2025 அன்று ஆத்தூர் தேவியாகுறிச்சி தாகூர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. மேலும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!