India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணவர்கள் தனியார் நிறுவனத்தில் 1 ஆண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி நிரந்தர வேலைவாய்ப்புடன், பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு பெற்றுத்தரப்படும். ஊதியமாக ரூ.17,000 முதல் ரூ.22,000 வரை பெறலாம். இதில் பயன்பெற https://tahdco.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். 94450-29473 என்ற எண்ணை அழைக்கலாம்.
சேலத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு “கிருஷ்ண தரிசனம் திருவிழா” என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி 19.08.2024 முதல் 30.08.2024 வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அம்சமாக கிருஷ்ணர் திருவுருவம் கொண்ட களிமண், காகிதக்குள், மார்பில் துகள் பொம்மைகள், பஞ்சலோகம், பித்தளை, பருப்பு உலோக சிலைகள், நூக்க மர உட் பதிப்பு ஓவியங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளது.
மாணவர்களின் ஊக்குவிக்கும் நான் முதல்வர் திட்டத்தில் சிறந்த கல்லூரிகள் பட்டியலில் சேலத்தில் உள்ள தீராஜ் லால் காந்தி தொழில் நுட்ப கல்லூரி இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கல்லூரிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
சேலம் வழியாக ஒடிஷா மாநிலம் சம்பல்பூருக்குச் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் வரும் நவம்பர் 29 வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், குண்டூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் பொன்னியம்மாள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பொன்னியம்மாளிடம் இருந்த பணம், நகையை திருடுவதற்காக, அவரை கொண்று உடலை ஆற்றில் வீசி 2 சவரன் நகை, ரூ.500 பணத்தை திருடியது தெரியவந்தது. இக்கொலை வழக்கில் சித்துராஜ், மாரிமுத்து, தனுஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள அணைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இனி கியூர் ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் சிரமமின்றி முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட்டுகளை எடுக்க முடியும்.
தேவகோட்டையைச் சேர்ந்தவர் சுப்ரமணியனை தொடர்பு கொண்ட கும்பல், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் செம்பு கிடைத்திருப்பதாகவும். அதனை விற்று தந்தால் பல லட்ச ரூபாய் கமிஷனாக தருவதாகவும் கூறியுள்ளனர். சேலம் சத்தியமங்கலம் வரவழைத்து 10,000 முன்பணம் பெற்று, போலி இரிடியம் செம்பை கொடுத்துள்ளனர். மோசடி கும்பலை தேடி வந்த போலீசார், சுந்தர பாண்டி, செம்புலிபிரபு ஜீனத் குமார் மூவரை கைது செய்தனர்.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், சேலம் மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆன்மிக நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். செய்திகள் உடனுக்குடன் பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, 83400-22122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். * உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்*
இந்திய சுதந்திர போராட்ட வீரரான ஒண்டிவீரனின் 253வது நினைவு நாளையொட்டி, சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி ஒண்டிவீரனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட வீரருக்கு மரியாதை செலுத்தினர்.
சேலம் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. சேலம் தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 140 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். <
Sorry, no posts matched your criteria.