India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே நேற்று சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் தலை நசுங்கி பலியானார். விபத்து குறித்து மகுடஞ்சாவடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
➤சங்ககிரி அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். ➤எடப்பாடியில் உள்ள உணவகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. ➤மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,501 கன அடியிலிருந்து 6,467 கன அடியாக குறைந்துள்ளது. ➤தொடர் விடுமுறை காரணமாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பின்னால் மோதிய லாரி ஓட்டுநர் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை நிலையத்தில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 10 அடிக்கு மேல் உள்ள சிலைகள், ரசாயனம் கலவை இல்லாத விநாயகர் சிலைகள் குறித்து சோதனை செய்தனர். 10 அடிக்கு மேல் சிலைகள் விற்கப்பட்டாலோ அல்லது பொது இடங்களில் வைக்கப்பட்டாலோ அந்த சிலைகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சிறையில் இருக்கும் சிறை அலுவலர் ஒருவர் சிறைக்கு பயன்படுத்தப்படும் அரிசி பருப்பு உணவு பொருட்களை வெளியே விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு வினோத் நேற்று ஆத்தூர் சிறைக்கு சென்று சம்பந்தப்பட்ட சிலை அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டுவருகின்றன. வார இறுதி நாள்கள், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் ஆக. 24 முதல் வரும் ஆக. 27 வரை பயணிகளின் தேவைக்கேற்ப 300 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு, வழிதடப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. Share it
சேலம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (19), கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை நேற்று ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பெயரில் குமரேசன் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று சேலம் கலெக்டர் பிருந்தாதேவி கூறினார். மாவட்டத்தில் உள்ள உயர் கல்வி பயிலும் தகுதியான மாணவர்கள் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து நகர கூட்டுறவு வங்கிகளையும் அணுகி கல்விக்கடன் பெற்று பயன் பெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
சேலத்தில் கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து நகர கூட்டுறவு வங்கிகளை அணுகி ரூ.5 இலட்சம் வரை கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது 150 சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை ஆகியவை ஆதார் எண் மூலமாக கூட்டுறவு சங்கங்களில் பெறலாம் என சேலம் மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.