India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் ஒமலூர் சந்தையில் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.450ஐ தொட்டது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக 100 டன் வர வேண்டிய சந்தைக்கு, 20 டன் அளவு மட்டுமே பூண்டு வந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மலை பூண்டு ரூ.350 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.
மைசூரு- செங்கோட்டைக்கு கரூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி செப் 4, 7ஆம் தேதி இரவு 9.20-க்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.50 மணிக்கு செங்கோட்டைக்கு செல்லும். சேலத்துக்கு 5.40 மணிக்கும், கரூருக்கு காலை 7.10-க்கு வந்து விடும். செங்கோட்டையில் இருந்து செப்.5, 8 ஆம் தேதிகளில் 7.45-க்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.30-க்கு செல்லும்.
ஆத்தூர், கல்லநத்தம் கிராமத்தில் ஆனைவாரி அருவியில் தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் முட்டல் ஏரியில் படகு சவாரி சென்று மகிழ்ந்தனர். முட்டல் ஏரி அருகே உள்ள பூங்காவை சுற்றிபார்த்து ரசித்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் சொக்கனூர் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு கருப்பன் (65) என்பவர் பைக்கில் வீரகனூர் நோக்கி வரும் போது எதிரே பைக்கில் வந்து கொண்டிருந்த சொக்கனூர் மணிகண்டன் 45 என்பவர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த கருப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன் மனைவி இந்திரா இருவரும் காயமடைந்த நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விஜய்யுடன் கூட்டணி அமையுமா? இல்லையா?
என்பது தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு. அ.தி.மு.க. தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டால் தான் கட்சி நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. அதை நினைத்துப் பெருமைக் கொள்கிறேன்’- சேலத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
சேலம் மாநகரில் விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆன்லைன் மூலமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் பேமெண்ட் கால் சென்டர் மூலம் 2 ஆண்டுகளில் மட்டும் 2 கோடியே 22 லட்சத்து 30 ஆயிரத்து 900 ரூபாய் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இதன் மூலம் 32,552 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் தயவை எதிர்பார்த்து பா.ஜ.க.வை அழைத்து நாணயம் வெளியீட்டு விழாவை தி.மு.க. நடத்தியது. இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களை தி.மு.க. ஏன் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை? இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க. என்டிஏ கூட்டணியை வைத்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளது என குற்றம்சாட்டினார்.
‘அண்ணாமலை பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சியமைத்துள்ளார்; மத்திய அரசு நாணயம் வெளியிட்டால்தான் புகழ் கிடைக்கும் என்பதுபோல அண்ணாமலை பேசுகிறார். எம்ஜிஆரின் வரலாறு தெரியாமல் அவரை சிறுமைப்படுத்தி அண்ணாமலை பேசுகிறார்’ என சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று சேலம் வழக்கறிஞர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. திமுக அரசு அதிமுக நிர்வாகிகள் மீது போடப்படும் பொய் வழக்குகளை எதிர்கொள்வது தொடர்பாக சேலத்தில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,
சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உழவர் சந்தைகள், வெளி மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ. 40 முதல் ரூ. 45 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் வரத்து குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 150 முதல் 200 டன் வரை தான் பெரிய வெங்காயம் வருகிறது. தரத்திற்கு ஏற்ப 50 முதல் ரூ.56 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.65 வரை விற்பனையானது.
Sorry, no posts matched your criteria.