India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30ம் தேதி அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு மேலாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும் விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 5 மணியளவில் கனமழை பெய்தது. மழை காரணமாக அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. மேலும் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்ட சரகத்துக்குட்பட்ட கடந்த 7 மாதங்களில் செல்போன் பேசியபடி, வாகனம் ஓட்டிய 276 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. என்றும் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 235 பேரில் ஓட்டுநர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவையினை கலெக்டர் இரா.பிருந்தாதேவி, இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி வைத்தார்கள். உடன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
சேலம் மாநகராட்சியின் தனிக் குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் மின்சாரப் பராமரிப்புப் பணிகள் இன்று (ஆகஸ்ட் 27) நடைபெறவுள்ளது. இதனால் மாநகராட்சிப் பகுதியில் இன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உடையாப்பட்டி துணை மின் நிலையம் , மல்லியக்கரை துணை மின் நிலையம், மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (27-08-2024) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இந்த துணை மின்நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் காலை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என அந்தந்த மின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உடையாப்பட்டி துணை மின் நிலையம் , மல்லியக்கரை துணை மின் நிலையம், மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (27-08-2024) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இந்த துணை மின்நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் காலை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என அந்தந்த மின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கடந்தாண்டு ஆன்லைனில் முறைகேடாக ரயில் டிக்கெட் எடுத்து அதனை விற்பனை செய்த 335 பேரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூபாய் 1.25 கோடி மதிப்பிலான ரயில் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று தெற்கு ரயில்வேத் துறை அதிகாரிகள் தகவல்.
சேலம், ஆத்தூரில் உள்ள ஆத்தூர் கிளைச் சிறையில் மளிகைப் பொருட்களை வெளியில் விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் ஆத்தூர் மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் ஜெயந்தியை சஸ்பெண்ட் செய்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் நேற்று உத்தரவிட்டுள்ளார். சிறை கண்காணிப்பாளர் ஜெயந்தியை சஸ்பெண்ட் செய்த சம்பவம் காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சேலம், ஈரோடு எடிஸ்ஸியா அரங்கில் ஏற்றுமதிக்கு ஏற்ற சந்தைகள் மற்றும் பொருட்கள் குறித்த சிறப்பு பயிற்சி நடைபெறுகிறது. இதில் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் (சிணைளீ-மதுரை) துணை தலைவரும், ஏற்றுமதியாளருமான ராஜமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 75388- 49222, 85249- 22323 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.