India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.
சேலம் மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகையை இன்று (அக்.31) பொதுமக்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தும் புத்தாடைகளை அணிந்தும், இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடித்தும் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். புதுமண தம்பதிகள் தல தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட சேலம் மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மின் கம்பங்கள் அருகில் மற்றும் மின் கம்பிகள் செல்லும் பாதையில் வெடிகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்,மின்மாற்றி அருகில் வெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்; பாதுகாப்பாக தீப ஒளி திருநாளை கொண்டாடுவோம் என்று பொதுமக்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.31) விடுமுறை தினம் என்பதால் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் கணினி முன்பதிவு மையங்கள் (PRS Centres) நாளை (அக்.31) மட்டும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி செயல்படும். அதாவது, நாளை (அக்.31) காலை 08.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை கணினி முன்பதிவு மையங்கள் செயல்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சேலம்: சிங்கிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான, பழனியாபுரம், சிங்கிபுரம், மேலக்காடு பகுதியில் 3 மணி அளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது. அதை அடுத்து லேசாக சாரல் மழை பொழியத் தொடங்கியது. திடீரென சாரல் மழையால் அப்பகுதி குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. நாளையும் மலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை தீபாவளி பண்டிகை என்பதால் மழையால் பட்டாசு விற்பனையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு இந்திய ரயில்வேயுடன் ஒத்துழைக்கவும். எனவே வெடி, பட்டாசு போன்றவற்றை எடுத்துக்கொண்டு ரயிலில் பயணிக்க வேண்டாம். அத்தகைய பொருட்களை எடுத்துக்கொண்டு பயணம் செய்வது தண்டனைக்குரியது. பாதுகாப்பான பயணம் வேண்டும் என்றால் நிச்சயம் உங்களுடன் பட்டாசுகளையோ எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையோ எடுத்துச் செல்வதை தவிர்த்திடுங்கள் என்று சேலம் ரயில்வே கோட்டம் பயணிகளுக்கு அறிவுறுத்தல்.
சேலம் மாவட்டத்தில் நேற்று (அக்.29) வெளியிடப்பட்டுள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 14,71,774 எண்ணிக்கையிலும், பெண் வாக்காளர்கள் 14,89,420 எண்ணிக்கையிலும், இதர வாக்காளர்கள் 319 எண்ணிக்கையிலும் என மொத்தமாக 29,61,513 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அமைதி காக்கப்படும் இடங்களின் அருகாமையில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் விபத்து, ஒலி மாசற்ற தீபாவளியைக் கொண்டாட வேண்டும். தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கலாம் என சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
➤சேலத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டதில், மொத்தம் 29,61,513 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். ➤ஈரோடு- சென்னை சென்ட்ரல் முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ➤சேலம் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ➤வரும் நவம்பவர் 29ஆம் தேதி சேலத்தில் புத்தகத் திருவிழா தொடங்கவுள்ளது.
Sorry, no posts matched your criteria.