India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் சின்ன சீரகாபாடியைச் சேர்ந்தவர் மாதவன். கல்லூரி மாணவரான இவர் அவரது நண்பர்களை பார்க்க ஆட்டையாம்பட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து தாக்கிய இருவர் அவரிடமிருந்து செல்போன் மற்றும் பைக்கை பறித்துக்கொண்டனர் . புகாரின்பேரில் அதே பகுதியை சேர்ந்த ரகுபதி மற்றும் மாதவன் ஆகியோரை ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘G.O.A.T’ திரைப்படம் நாளை (செப்.5) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் அப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில திரையரங்குகளில் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது.
பைத்தூர் பஞ்சாயத்து தலைவரை பதவியிலிருந்து நீக்கிய அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 8 வாரத்தில் ஊரக வளர்ச்சி முதன்மை செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியை முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பஞ்சாயத்து தலைவரை பதவியிலிருந்து நீக்கிய அரசு உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு.
சேலம் மாவட்டம், குப்பனூர் வெள்ளையம்பட்டியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இருவருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
சேலத்தில் முதல் முறையாக இஸ்ரோ மற்றும் டார்வின் சயின்ஸ் கிளப் சார்பில் வான் அறிவியல் கண்காட்சி புதிய பேருந்து நிலையத்தில் நாளை தொடங்கி இரண்டு நாள் நடைபெறுகிறது. இதில் வானியல் சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இஸ்ரோவின் செயல்பாடுகளை குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் இக்கண்காட்சி நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பாரா ஒலிம்பிக்கில்
வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மத்திய அமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 3 நகரங்கள், 3 பாராலிம்பிக் தொடர்கள், 3 பதக்கங்கள்; மீண்டும் சாதித்துவிட்டீர்கள் மாரியப்பன்; ரியோ, டோக்கியோ, பாரிஸ் என பாராலிம்பிக்கில் பதக்கங்களைக் குவித்ததற்கு வாழ்த்துகள்; உங்கள் அசைக்க முடியாத திறமையை உலகம் கண்டது; வாழ்த்துகள் சாம்பியன் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
சேலம்- கொச்சின் (LLR514), கொச்சின்- சேலம் (LLR515) விமான சேவையை இன்று (செப்.04) அலையன்ஸ் ஏர் (Alliance Air) விமான நிறுவனம் ரத்து செய்துள்ளதாக சேலம் விமான நிலையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த மாதம் ரயில்களில் டிக்கெட் இன்றி முறைகேடாக பயணித்த 17,643 நபர்களிடமிருந்து 1.03 கோடி ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரி கூறுகையில் ரயிலில் டிக்கெட் இன்றியும் முறைகேடாக பயணம் செய்வது விதிமீறிய செயல் மீறி தொடர்ந்து ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்வோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை தெரிவித்தார்.
சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பட்டாசு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
நாடு முழுவதும் வருகிற 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி வெளியூர்களில் படிப்பவர் மற்றும் பணிபுரிபவர்கள் அவருடைய சொந்த ஊருக்கு செல்லும் வகையில் சேலம் கோட்டம் சார்பில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், மேட்டூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.