India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம்: வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியைச் சேர்ந்தவர் இராஜசேகரன்,(39). இவர் வாழப்பாடி அரசன் குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டு, இன்று சென்னையில் நடந்த விழாவில், இராஜசேகரனுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விருது வழங்கி, வாழ்த்தி பாராட்டினார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சேலம்- பெங்களூரு, சேலம்- கொச்சின், கொச்சின்- சேலம், பெங்களூரு- சேலம் ஆகிய விமான சேவைகளை அலையன்ஸ் ஏர் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (செப்.05) முழுவதுமாக ரத்துச் செய்துள்ளதாக சேலம் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் வருகைதந்த தமிழக வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை சேலம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆகியோர் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் அதைத் தொடர்ந்து அமைச்சரிடம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட ஆட்சியரும் சந்தித்து பேசினர்.
திட்டமில்லா பகுதிகளில் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைபடுத்த விண்ணப்பிக்கலாம். திட்டமில்லா பகுதிகளில் 2011 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று சேலம் கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்தார்.
விஜய்யின் ‘G.O.A.T.’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியான நிலையில், சேலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் தமிழன் ஆ பார்த்திபன் தலைமையிலான ரசிகர்கள் கேக் வெட்டியும், பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலைகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் நியமனம் செய்யப்பட்டார். கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். மேற்கு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தன்னை நியமன செய்ததற்கு நன்றி தெரிவித்த பின்பு, வருகிற சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றிபெற அரும்பாடுபடுவேன் என்றும் கூறினார்.
மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 15,888 கன அடியிலிருந்து 17,272 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.240 அடியாக அதிகரித்துள்ளது. நீர் இருப்பு 87,600 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும் அணை மின் நிலையம் வழியாக 19,000 கன அடியும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாயில் 700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் ‘THE G.O.A.T.’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட உள்ள நிலையில், முக்கிய திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து இந்நாளில் தமிழக அரசு விருதுகளை வழங்கி வருகிறது.
நடப்பாண்டில் சேலம் மண்டலத்தில் 39 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் இசையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘G.O.A.T.’ திரைப்படம் இன்று (செப்.05) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், அப்படத்தில் தவெகவின் சேலம் மாவட்டத் தலைவர் தமிழன் ஆ பார்த்திபன் போக்குவரத்து காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். அது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
Sorry, no posts matched your criteria.