Salem

News September 7, 2024

மஞ்சுமல் பாய்ஸ் குணா குகையில் விநாயகர்

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலம் அய்யந்திருமாளிகையில் ஸ்ரீ சக்தி விநாயகர் குழு சார்பில், மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் வரும் காட்சியைப் போன்று குணா குகை போன்று பந்தல் அமைக்கப்பட்டு வாழை தோரணங்களுடன் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் பக்தர்கள் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருக விநாயகரை வழிபட்டனர்.

News September 7, 2024

48,969 பேர்: சேலம் கலெக்டர் தகவல்

image

சேலம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வரும் செப் 10 முதல் செப்.24 வரை நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 26,478 பள்ளி மாணவ, மாணவிகளும், 13,273 கல்லூரி மாணவ, மாணவிகளும், 1,737 மாற்றுத்திறனாளிகளும், 1,246 அரசு அலுவலர்களும், 6,235 பொதுமக்களும் என மொத்தம் 48,969 நபர்கள் பதிவுச் செய்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News September 7, 2024

சேலத்தில் 558 சிலைகளுக்கு அனுமதி

image

சேலம் மாவட்டத்தில் மட்டும் 558 விநாயகர் சிலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அனுமதி இல்லாமல் யாரும் விநாயகர் சிலை வைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதி பெற்று விநாயகர் சிலை வைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 7, 2024

சேலம்: 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில், 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சேலம் கோட்டம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News September 7, 2024

சேலம் ஆட்சியர் அறிவிப்பு

image

டிஎன்பிஎஸ்சி சார்பில் செப்.14ல் நடைபெறவுள்ள குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வினை சேலம் மாவட்டத்தில் 46,856 பேர் எழுத உள்ளனர். சேலம், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, வாழப்பாடி ஆகிய வட்டங்களில் 162 கூடங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு நாளன்று காலை 9-க்குள் தேர்வு கூடத்திற்குள் வருகை தருபவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.

News September 6, 2024

சேலம் அருகே ஊர்வலத்தில் நிகழ்ந்த சோகம்

image

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம், சூரப்பள்ளி கிராமம், சோறையான் வளவு பகுதியில் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்கும் பொழுது ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

News September 6, 2024

சேலம் மாவட்டத்தில் கிடு கிடுவென உயர்ந்த விலை

image

தொடர் முகூர்த்தங்கள், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, சேலம் வ.உ.சி. பூ மார்கெட்டில் பூக்களின் விலை 2வது நாளாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி, முல்லை ரூ. 800 க்கும், கனகாம்பரம் ரூ.1000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூஜை பொருட்களான ஒரு வாழை இலை ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.7க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய், வாழைப்பழங்கள் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. 

News September 6, 2024

டெங்கு: சேலம் கலெக்டர் அறிவுறுத்தல்

image

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 1,598 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெங்கு கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News September 6, 2024

சேலத்தில் தொழில் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்

image

சேலத்தில் 2024-2025ம் நிதி ஆண்டில் 428 பேருக்கு தொழில் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவக்குமார் கூறினார். உற்பத்தி தொழில், உணவு பதப்படுத்தல், ஆயத்த ஆடை தைத்தல், தென்னை நார்ப்பொருள் உற்பத்தி, ஹாலோ பிளாக், பல்பொருள் அங்காடி, ஆட்டோ மொபைல்ஸ், அழகு நிலையம், கழிவு மேலாண்மை, ஆம்புலன்ஸ் உள்பட தொழில் தொடங்க கடன் வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது என்றார்.

News September 6, 2024

சேலத்தில் உணவுத் திருவிழா

image

சேலம் மாவட்டத்தில் ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரச்சாரம், சிறுதானியங்கள், பாரம்பரிய உணவு திருவிழா போட்டிகள் நடைபெறவுள்ளன. சேலம் மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிகளில் செப்.09 முதல் செப்.12 வரை கிராம பொது சேவை மையக்கட்டடங்களிலும் , 20 வட்டார அளவில் செப்.19 முதல் செப்.20 வரை வட்டாரப் பொது சேவை மையக் கட்டடங்களிலும், மாவட்ட அளவில் செப்.25 அன்று ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!