India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண்.56106 ஈரோடு – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் நாளை 18.03.2025 ஈரோடு கரூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூர் சந்திப்புக்கு இயக்கப்படாது; அன்று கரூரில் இருந்து காலை 09.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை இயங்கும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (மார்ச். 16) தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில், ஹெட்லைட்டை மாற்றலாம், தலையை மாற்ற முடியாது என விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வைட்டமின் ‘ஏ’ சத்து குறைபாட்டால் வறண்ட விழித்திரை, மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு சேலத்தில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை 5வயது வரை உள்ள 2,62,674 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் உள்ள ஆரம்ப,துணை மற்றும் அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்படும். இதை குழந்தை வைத்துள்ள மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் சேலத்தில் பார்க்க வேண்டிய பிரசித்தி பெற்ற முருகன் கோயில்கள். ▶️முத்துமலை முருகன் கோயில் (ஏத்தாப்பூர்) ▶️காவடி பழனி ஆண்டவர் திருக்கோயில் (சூரமங்கலம்) ▶️காளிப்பட்டி முருகன் கோயில் (ஆட்டையாம்பட்டி) ▶️கந்தாஸ்ரமம் திருக்கோயில் மற்றும் குமரகிரி தண்டாயுதபாணி கோயில் (சேலம் மாநகர்) ஆகும். இதை மற்ற பக்தர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

சேலம், ஆத்தூர் பகுதி சேர்ந்த அம்மம்பாளையத்தில் இரண்டு பெண்கள் நேற்று, இரவு 8:00 மணி அளவில் மோட்டார் பைக்கில் அம்மம்பாளையம் சாலையை கடக்கும் பொழுது ஆத்தூர் டு சென்னை சென்ற அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து 2 பெண்களை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனை அனுமதித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் ஒரு பெண் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல். .

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.16 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.

சேலம் மாநகர பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல் துறை தொடர்ந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 16) மாநகரப் பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் 580 வீடுகளும், வாழப்பாடி ஒன்றியத்தில் 429 வீடுகளும், கொளத்தூர் ஒன்றியத்தில் 379 வீடுகளும், எடப்பாடி ஒன்றியத்தில் 335 வீடுகளும், தலைவாசல் ஒன்றியத்தில் 279 வீடுகளும், ஆத்தூர் ஒன்றியத்தில் 190 வீடுகளும் என மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 3,500 வீடுகள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் தகவல்.

கோடை வெயிலால்,சேலம் மாவட்டத்தில் 200 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடக்கிறது. மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம் பீர் வகைகள் விற்பனை அதிகரித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே குறைவான சேவை உள்ள வழித்தடங்களில் கூடுதலாகவும், போக்குவரத்து சேவை இல்லாத வழித்தடங்களில் புதிதாகவும், மினிபஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 80 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.