Salem

News November 18, 2024

மழையில் முளைத்த விஷகாளான் உதயநிதி: EPS 

image

சேலம், மேச்சேரி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் குறித்து ‘நேற்று பெய்த மழையில் முளைத்த விஷ காளான்’ என விமர்சனம் செய்தார். திமுகவில் எவ்வளவு பேர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். எதன் அடிப்படையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினார். கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பதுதான் தகுதியா? என கூறினார்.

News November 18, 2024

ரயில் மோதி 2 மாணவர்கள் உயிரிழப்பு

image

சேலம் அருகே உள்ள புத்தரகவுண்டம்பாளையம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு மாணவர்கள்  ரயில் மோதி பலியானார்கள். இவர் நேற்று மாலை செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சேலம்-விருதாச்சலம் பயணிகள் ரயில் திடீரென மாணவர்கள் மீது மோதியது. இவ்விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 17, 2024

“பேசுவது எளிது; செய்வது கடினம்!”- இ.பி.எஸ். பேச்சு

image

“கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் வேலை இல்லை; அனைவருக்குமான பொதுவான திட்டமாகத்தான் மேட்டூர் அணை உபரிநீர் திட்டம்; உபரிநீர் திட்டம் குறித்து யார் யாரோ பேசுகிறார்கள்; பேசுவது எளிது; செய்வது கடினம்” என்று சேலம் மேச்சேரியில் நடந்த விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

News November 17, 2024

நீர் மேலாண்மை திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் வடிவம்

image

“அ.தி.மு.க. ஆட்சியில் நீர் மேலாண்மை என்ற திட்டத்திற்கு வடிவம் கொடுக்கப்பட்டது; விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து ஆட்சி செய்ய வேண்டும். மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் 70% பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன; கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று சேலம் மேச்சேரியில் நடந்த விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!

News November 17, 2024

ஏத்தாப்பூரில்  ரயில் மோதி ஒரு மாணவன் உயிரிழப்பு

image

ஏத்தாப்பூர் ரயில் நிலையம் அருகே செல்போன் பார்த்தபடி தண்டவாளத்தில் சென்ற புத்திரகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவர் தினேஷ்(16). இன்று 11.30 மணி அளவில் பேசஞ்சர் ரயில் மோதி உயிரிழந்தார். மற்றொரு மாணவர் அரவிந்த்(16) படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து, ஏத்தாப்பூர் மற்றும் சேலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 17, 2024

சேலம் ஆவினிலிருந்து சிங்கப்பூருக்கு பால்!

image

சேலம் ஆவின் பால் பண்ணையில் இருந்து 4,000 லிட்டர் பால் சென்னை அடையாற்றில் உள்ள கடற்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்த வாரம் 6,000 லிட்டர் பால் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, வரும் டிசம்பர் மாதம் 25,000 லிட்டர்‌ பால் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

News November 17, 2024

வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்ட அமைச்சர் 

image

சேலம் மாநகராட்சியின் கிச்சிப்பாளையம், 43- வது வார்டிற்குட்பட்ட புதுத்தெரு நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று (நவ.17) நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் பணிகளுக்கான சிறப்பு முகாமை திமுகவின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது, திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News November 17, 2024

சேலம் மாவட்டத்தில் இன்றைய நிகழ்வுகள்

image

1) சேலம் சின்னக்கடை வீதி அருள்மிகு ராஜகணபதி கோவிலில் காலை 10 மணிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜையில் சுற்றுலாத்துறை அமைச்சர் பங்கேற்கிறார். 2). தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு மேச்சேரியில் மாலை 3 மணிக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா.

News November 17, 2024

2ஆவது நாள் வாக்காளர் சிறப்பு முகாம்

image

சேலத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் 2ம் நாள் நடைபெறுகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள், ஆதார் எண் இணைப்பவர்கள், பெயர் நீக்கம், பெயர், வயது, பாலினம், கதவு எண், முகவரி பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும், தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்கு தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுசாவடிகளில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் திருத்தங்கள் செய்யலாம்.

News November 17, 2024

சேலம் வரும் எடப்பாடி பழனிச்சாமி

image

சேலம், மேட்டூர் அணையில் இருந்து 100 ஏரி நிரம்பும் உபரி நீர் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு காவேரி உபரி நீர் நடவடிக்கை குழு சார்பில் பாராட்டு விழா மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டியில் இன்று நடைபெற உள்ளது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ளார்.