Salem

News October 17, 2024

தந்தை பெரியார் சிலைக்கு அமைச்சர் மரியாதை

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் சிலைக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சரை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்வில் பேராசிரியர் சங்க நிர்வாகிகள், தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News October 16, 2024

விவசாயிகளின் கவனத்திற்கு ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைந்த வாடகைக்கு மண் தள்ளும் இயந்திரம், டிராக்டர்கள், மண் அள்ளும் இயந்திரங்கள், தேங்காய் பறிக்கும் இயந்திரம் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை உழவர் செயலி வழியாக இ-வாடகை செயலியில் வீட்டிலிருந்தே முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News October 16, 2024

சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் வரும் அக்.23 முதல் நவ.08 வரை மக்கள் சந்திப்பு திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார். இம்முகாமில் அனைத்துத்துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கி தீர்வுகாணும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News October 16, 2024

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர்

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று (அக்.16) காலை நடந்த 23-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி, ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலை, இளநிலை மாணவ, மாணவிகள் என 1,000க்கும் மேற்பட்டோருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களுடன் கூடிய பட்டங்களையும் வழங்கினார்.

News October 16, 2024

சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி

image

தமிழ்நாடு ஆளுநர் இரண்டு நாள் பயணமாக சேலம் வந்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசுகையில், “வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைக்கு ஏற்ற வகையில் அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைத்து விதமான சாத்தியமான வழிகளை அரசு முயற்சித்து செய்து வருகிறது. மழை பாதிப்புகளை தமிழக அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்” என்றார்.

News October 16, 2024

ஆளுநருக்கு பூங்கொத்து வழங்கி எம்எல்ஏ வரவேற்பு

image

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக சேலம் வந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, சேலம் மேச்சேரியில் நேற்று மாலை நடந்த சிறந்த கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விழாவில் கலந்து கொண்டு நெசவாளர்களுக்கு கேடயம் மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, மேச்சேரி வந்த ஆளுநருக்கு பூங்கொத்து வழங்கி மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் வரவேற்றார்.

News October 16, 2024

சேலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (16.10.24) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News October 15, 2024

சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை 16.10.24 விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News October 15, 2024

தொழில் தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு!

image

சேலம் மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான சேலம் சிட்கோ தொழிற்பேட்டைகளில் காலியாக உள்ள தொழில்மனைகளை வாங்க www.tansidco.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 94450- 06571 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

News October 15, 2024

சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரும் அக்.19-ம்தேதி பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்டக் குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!