Salem

News November 22, 2024

சேலம் வாக்காளர்களின் கவனத்திற்கு

image

சேலம் மாவட்டத்திற்குட்பட்ட 11 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள 3,264 வாக்குச்சாவடிகளிலும் நவ.23, 24 ஆகிய தேதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

தோட்டக்கலைத் துறை பண்ணையில் கலெக்டர் ஆய்வு

image

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சிறுமலை கிராமத்தில் அமைந்துள்ள தோட்டக்கலை பண்ணையை மாவட்ட ஆட்சியர்  பிருந்தா தேவி திடீரென ஆய்வு செய்தார். ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பண்ணையில் நடைபெறும் பணிகள் குறித்து தோட்டக்கலைத் துறை அலுவலரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News November 21, 2024

தேசிய தொல்குடியினர் தின சிறப்பு முகாம்கள்

image

சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தேசிய தொல்குடியினர் தின சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. நவ.22இல் வெள்ளிக்கவுண்டனூரிலும், நவ.23இல் கருமந்துறையிலும், நவ.27இல் ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், நவ.28இல் பச்சமலை, பெரியபக்களம் பகுதியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதனை பழங்குடியினர் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News November 21, 2024

சேலம் இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் பெயர் பட்டியலை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இன்று சங்கிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி, ஊரகம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பு மற்றும் பிரச்சனைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

News November 21, 2024

சேலம்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤வாழப்பாடி அருகே பிடிபட்ட எறும்பித் திண்ணி ➤சேலத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ➤லஞ்சம் பெற்ற மின்சார ஊழியர்கள் கைது ➤குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க அறிவுறுத்தல் ➤வள்ளுவர் சிலை வெள்ளி விழா: கட்டுரை போட்டி ➤நள்ளிரவில் மர குடோனில் தீ விபத்து ➤சேலத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு ➤2 நாட்கள் பணி புறக்கணிப்பு-வழக்கறிஞர்கள் சங்கம்.

News November 21, 2024

பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்

image

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்துள்ள அருனூத்துமலை கிராமத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்காக மாவட்ட ஆட்சியர் சென்றார். அங்கு பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News November 21, 2024

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க அறிவுரை

image

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சேலம் மேற்கு மாவட்டத்தில், 3 சட்டசபைத் தொகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில், பிறக்கும் குழந்தைகளுக்கு, தங்க மோதிரம் வழங்க வேண்டும் என மாவட்டச் செயலாளர் செல்வகணபதி எம்பி, கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் தொண்டர்கள் அன்னதானம், ரத்ததானம் வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். 

News November 21, 2024

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: கட்டுரை போட்டிகள்

image

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாளை (நவ.22) பள்ளி அளவிலும், நவ.25-ல் வட்டார அளவிலும், நவ.27-ல் மாவட்ட அளவிலும் கட்டுரை போட்டிகள் நடக்கவுள்ளன. ‘அய்யன் வள்ளுவரின் அடி தொடர சூளுரைப்போம்’,  “எனக்கு பிடித்த திருக்குறள்” தலைப்புகளில் கட்டுரை போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2024

சேலத்தில் இன்று மின்தடை

image

சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், கிச்சிபாளையம், அஸ்தம்பட்டி, சங்ககிரி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் இன்று (நவ.21) மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக கலெக்டர் அலுவலகம், GH, சங்ககிரி, அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில், கோர்ட் ரோடு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம்.

News November 21, 2024

சேலத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு

image

சபரிமலை சீசனை முன்னிட்டு நவ.20 முதல் ஜன.16 வரை சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வாரத்தில் புதன்கிழமைதோறும் சென்னை சென்ட்ரலில் இருந்தும், வியாழன்கிழமைதோறும் கொல்லத்தில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

error: Content is protected !!