Salem

News November 25, 2024

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

image

சேலம் (நவ.25) இன்றைய நிகழ்வுகள். ➤ காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. ➤ காலை 9 மணிக்கு அரசு மருத்துவ கல்லூரியில் முத்தமிழ் கலை மன்றம் சார்பில் கலை நிகழ்ச்சி நிகழ்ச்சி. ➤ இன்று காலை 10 மணிக்கு அதானியை கைது செய்ய வலியுறுத்தி சார்பில் ஆர்ப்பாட்டம். ➤ காலை 11 மணிக்கு சாதியற்றோர் பேரவையின் சார்பில் ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்திகோரி ஆர்ப்பாட்டம்.

News November 25, 2024

வாக்காளர் பட்டியலில் புதிதாக 2,083 பேர் விண்ணப்பம்

image

சேலம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 315 சிறப்பு மையங்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க கோரி 813 பேர், பெயர் நீக்கக் கோரி 396 பேர், தொகுதி, வார்டு, முகவரி மாற்றங்கள், திருத்தங்கள் கோரி 874 பேர் என மொத்தம் 2,083 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

News November 25, 2024

சேலத்தில் 27,330 பேர் மனு வழங்கல் 

image

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில், இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட வாக்காளர் சுருக்க திருத்த சிறப்பு முகாம் வாயிலாக, 18 வயது நிரம்பியவர்கள் தங்களுடைய பெயர்களை சேர்க்க, ஏற்கனவே இருப்பவர்கள் தங்கள் பெயர்களை திருத்தம் செய்ய, விலாசம் மாற்றம் என மொத்தம் 27,330 நபர்கள் மனு வழங்கியுள்ளதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்.

News November 25, 2024

சேலம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவோ, மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய நவம்பர் 24 இரவு அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டது.

News November 24, 2024

சேலம்: இன்றைய முக்கியச் செய்திகள்!

image

➤ சேலம் நடராஜன் ரூ.10.75 கோடிக்கு ஏலம் ➤ ஆத்தூர் அருகே மலைப்பாம்பை மீட்ட வனத்துறை ➤ ரத்ததானம் வழங்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் ➤ குழந்தையை கவிதை பாட வைத்த கவிஞர் அறிவுமதி ➤ சந்து கடையில் மது விற்பனை: 3 பேர் கைது ➤ சேலம் வழியாக சிறப்பு ரயில்➤ கிணற்றில் விழுந்த மாடு மீட்பு ➤ சேலத்தில் ரூ.59 லட்சம் அபராதம் வசூல் ➤ மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு ➤ லஞ்ச வழக்கில் சிக்கிய 2 மின் ஊழியர் சஸ்பெண்ட்

News November 24, 2024

சேலம் நடராஜன் ரூ.10.75 கோடிக்கு ஏலம்!

image

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர், 2024ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். இந்நிலையில் இன்று அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில், நடராஜனை ரூ.10.75 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளனர்.

News November 24, 2024

சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டம்

image

சேலம் மாநகராட்சியில் மாமன்ற இயல்பு கூட்டம் மாதம் தோறும் நடைபெறும். அந்த வகையில், இந்த மாதம் மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டம் வருகின்ற 26ஆம் தேதி, மாநகராட்சி மைய மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பினை சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் சிங் வெளியிட்டார். வருகின்ற 26ஆம் தேதி காலை 11 மணிக்கு துவங்கும் மாநகராட்சி இயல்பு கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 24, 2024

சேலம் வழியாக சிறப்பு ரயில்

image

சேலம் வழியாக விசாகப்பட்டினம் – கொல்லம் இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. டிச.04,11,18, 25, ஜன.01,08,15,22,29, பிப். 05,12,19,26 தேதிகளில் விசாகப்பட்டினத்தில் இருந்தும், மறுமார்க்கத்தில், டிச. 05,12,19,26, ஜன.02,09,16,23,30, பிப். 06,13,20,27 தேதிகளில் கொல்லத்தில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடம் நின்றுச் செல்லும்.

News November 24, 2024

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

image

தமிழ்நாடு கர்நாடக எல்லையில் உள்ள காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் அணைக்கு வரும் நீர் அளவு குறைய தொடங்கியது. 7,545 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று 6,422 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

News November 24, 2024

லஞ்ச வழக்கில் சிக்கிய 2 மின் ஊழியர் சஸ்பெண்ட்

image

சேலம், மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்த வணிக ஆய்வாளர் மணி, ஃபோர்மேன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டனர். புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க இருவரும் ரூ.4,000 லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இருவரையும் பணி நீக்கம் செய்து மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார். 

error: Content is protected !!